search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றார் தமிழக வீரர் குகேஷ் - ராகுல், பிரியங்கா வாழ்த்து
    X

    உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றார் தமிழக வீரர் குகேஷ் - ராகுல், பிரியங்கா வாழ்த்து

    • இளம் உலக செஸ் சாம்பியன் ஆன குகேஷ்-க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    • நீங்கள் இன்னும் பெரிய சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள் சாம்பியன்.

    இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது.

    13 சுற்றுகள் முடிவில் குகேசும், லிரெனும் தலா 2 சுற்றுகளில் வெற்றி பெற்று இருந்தார்கள். மற்ற அனைத்து சுற்றுகளும் டிராவில் முடிந்தன. இதனால், இருவரும் தலா 6.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தார்கள்.

    இந்நிலையில், வெற்றியை தீர்மானிக்கும் 14-வது மற்றும் கடைசி சுற்று போட்டி இன்று நடந்தது. இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் சீன வீரரை வீழ்த்தி 7.5 புள்ளிகள் பெற்று உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். 18 வயதிலேயே சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் ஆனந்த கண்ணீர் சிந்தினார்.

    இந்நிலையில், இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ்-க்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, வயநாடு எம்.பி. ப்ரியங்கா காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    ராகுல் காந்தி அவரது எக்ஸ் பதிவில், "மிகவும் இளம் வயதில் மகத்தான சாதனையை நிகழ்த்தியுள்ளார். அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் எதுவும் சாத்தியம் என்பதை எங்களுக்கு நீ நிரூபித்துவிட்டாய்.. வாழ்த்துகள் சாம்பியன்" என்று பதிவிட்டுள்ளார்.

    பிரியங்கா காந்தி அவரது எக்ஸ் பதிவில், "இளம் உலக செஸ் சாம்பியன் ஆன குகேஷ்-க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இது ஒட்டுமொத்த தேசத்துக்கும் பெருமையான தருணம். நீங்கள் இன்னும் பெரிய சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள் சாம்பியன்" என்று பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×