search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    நன்றிக்கடன்... அரியானாவில் காங்கிரஸ் வேட்பாளருக்காக சேவாக் தேர்தல் பிரசாரம்
    X

    நன்றிக்கடன்... அரியானாவில் காங்கிரஸ் வேட்பாளருக்காக சேவாக் தேர்தல் பிரசாரம்

    • அனிருத் சவுத்ரியை நான் என்னுடைய மூத்த சகோதரராக கருதுகிறேன்.
    • அவருடைய தந்தையும், முன்னாள் பிசிசிஐ தலைவராக இருந்தவருமான ரன்பீர் சிங் மஹேந்திரா எனக்கு ஏராளமான உதவியை செய்திருக்கிறார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரராக திகழ்ந்தவர் வீரேந்திர சேவாக். இவர் தோஷம் (Tosham) தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் அரியான மாநில முதல்வர் பான்சி லால் பேரன் அனிருத் சவுத்ரிக்காக தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக வீரேந்திர சேவாக் கூறுகையில் "அனிருத் சவுத்ரியை நான் என்னுடைய மூத்த சகோதரராக கருதுகிறேன். அவருடைய தந்தையும், முன்னாள் பிசிசிஐ தலைவராக இருந்தவருமான ரன்பீர் சிங் மஹேந்திரா எனக்கு ஏராளமான உதவியை செய்திருக்கிறார். அவருக்கு இது மிகவும் முக்கியமான நாட்களில் ஒன்று. அவருக்கு உதவ முடியும் என நினைக்கிறேன். தோஷம் தொகுதியில் உள்ளவர்கள் அனிருத் சவுத்ரி வெற்றிக்கு உதவ கேட்டுக்கொள்கிறேன்" என வீடியோ செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

    தோஷம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் அனிருத் சவுத்திரி (48) முன்னாள் பிசிசிஐ தலைவர் ரன்பீர் மஹேந்திராவின் மகன் ஆவார். இவர் அரியானா மாநிலத்தில் நான்கு முறை முதல்வராக இருந்து பான்சி லால் பேரன் ஆவார். இவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் பான்சி லாலின் இளைய மகன் சுரேந்தர் சிங்கின் மகள் ஸ்ருதி சவுத்ரி (48) போட்டியிடுகிறார். இதனால் தோஷம் தொகுதி குடும்ப விவகாரமாகியுள்ளது.

    "விவசாயிகள் எதிர்கொண்ட பிரச்சனைகளை தீர்ப்பதில் பா.ஜ.க. அரசு தோல்வியடைந்துவிட்டது. இதனால் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன். தண்ணீர் பிரச்சனை மிகப்பெரிய அளவில் உள்ளது. அதை சரி செய்வதில் அரசு தோற்றுவிட்டது. இந்த பகுதியில் முன்னேற்றம் இல்லை. இந்த பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என நான் விரும்புகிறேன்" எனவும் சேவாக் தெரிவித்துள்ளார்.

    பான்சி லால் குடும்பத்தின் கோட்டையாக தோஷம் தொகுதி விளங்குகிறது. பான்சி லால் இந்த தொகுதியில் ஆறு முறை வெற்றி பெற்றுள்ளார். சுரேந்தர் சிங் மற்றும் அவரது மனைவி கிரண் சவுத்ரி பலமுறை வெற்றி பெற்றுள்ளனர். 2019-ல் கிரண் சவுத்ரி 18059 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளரை தோற்கடித்திருந்தார்.

    Next Story
    ×