search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆஸ்பத்திரிகளில் துறைகளுக்கிடையே நோயாளிகளுக்கு பரிந்துரை செய்ய வழிகாட்டு நெறிமுறைகள்
    X

    ஆஸ்பத்திரிகளில் துறைகளுக்கிடையே நோயாளிகளுக்கு பரிந்துரை செய்ய வழிகாட்டு நெறிமுறைகள்

    • துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பும், தகவல் தொடர்பும் இல்லாததால், நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
    • ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் பல்வேறு இணை நோய்களுடன் இருப்பதால், பல துறைகளின் கவனிப்பு அவசியம் ஆகிறது.

    புதுடெல்லி:

    ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு சிறப்பு மருத்துவ நிபுணரின் ஆலோசனை தேவைப்பட்டால், அவரிடம் சிகிச்சை பெற நோயாளிக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

    அப்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை முதல்முறையாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நோயாளிகளுக்கு பரிந்துரை செய்வதில், முரண்பாடுகளும், பொறுப்பேற்கும் தன்மையும் இல்லாததால், இந்த நெறிமுறைகள் வெளியிடப்படுகின்றன. தான் அனுமதிக்கப்படும் துறையை தவிர, நோயாளிக்கு சிறப்பு மருத்துவமோ, பகுப்பாய்வோ, மருத்துவ ஆலோசனையோ தேவைப்பட்டால், அவருக்கு உடனடியாக பரிந்துரை செய்யப்பட வேண்டும்.

    அந்த பரிந்துரையை சம்பந்தப்பட்ட டாக்டர்களே எழுத வேண்டும். முதுநிலை பயிற்சி மருத்துவர்கள், தங்கள் டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தாமல் அந்த பரிந்துரையை முடித்துவிடக்கூடாது.

    ஒவ்வொரு டாக்டரும் முந்தைய நாள் தங்களது குழுவினர் கவனித்த பரிந்துரை நோயாளிகளின் பட்டியலை ஆய்வு செய்ய வேண்டும். அப்போதுதான், நோயாளிகள் பராமரிப்பையும், பயிற்சி மருத்துவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கவும் முடியும்.

    துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பும், தகவல் தொடர்பும் இல்லாததால், நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் பல்வேறு இணை நோய்களுடன் இருப்பதால், பல துறைகளின் கவனிப்பு அவசியம் ஆகிறது.

    பயிற்சி மருத்துவர்களுக்கும் இது நல்ல பயிற்சி முறையாக அமைய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×