என் மலர்
இந்தியா
இது மிகப் பெரிய விபத்தல்ல: கும்பமேளா கூட்ட நெரிசல் குறித்து ஹேமமாலினி
- கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா பிப்ரவரி 26-ம் தேதி வரை 45 நாள் நடக்கிறது.
- கும்பமேளா நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியாகினர்.
புதுடெல்லி:
உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்து வருகிறது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா அடுத்த மாதம் 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது.
கும்பமேளா நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
இதற்கிடையே, கும்பமேளா நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியாகினர். மாநில அரசின் நிர்வாகம் சரியில்லை என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், நடிகையும், பா.ஜ.க. எம்பியும் ஆன ஹேமமாலினி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாங்கள் கும்பமேளா போயிருந்தோம். நன்றாகக் குளித்தோம். எல்லாம் நன்றாக நிர்வகிக்கப்பட்டது. கூட்ட நெரிசல்) நடந்தது சரிதான்.
இது ஒரு பெரிய சம்பவம் இல்லை. அது எவ்வளவு பெரியது என எனக்குத் தெரியவில்லை. இது மிகைப்படுத்தப்படுகிறது.
கும்பமேளா நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டது, மேலும் அனைத்தும் மிகச் சிறப்பாக செய்யப்பட்டது.
நிறைய பேர் வருகிறார்கள், அதை நிர்வகிப்பது மிகவும் கடினம். ஆனால் நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்கிறோம் என தெரிவித்தார்.