search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கோழைத்தனமான ஆங்கிலேயர்களைப் போல் பின்னால் இருந்து தாக்குவது ஏன்?- பா.ஜ.க.வை சாடிய ஹேமந்த் சோரன்
    X

    கோழைத்தனமான ஆங்கிலேயர்களைப் போல் பின்னால் இருந்து தாக்குவது ஏன்?- பா.ஜ.க.வை சாடிய ஹேமந்த் சோரன்

    • ஐந்து வருடங்களில் 11 லட்சம் ரேசன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டன.
    • ஐந்து ஆண்டுகளில் 13 ஆயிரம் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டது ஏன்?.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. முதற்கட்ட தேர்தல் வருகிற 13-ந்தேதியும், 2-ம் கட்ட தேர்தல் வருகிற 20-ந்தேதியும் நடக்கிறது.

    தற்போது முதலமைச்சராக இருக்கும் ஹேமந்த் சோரனின் கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. பா.ஜ.க. சில கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது.

    தற்போது தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அமித் ஷா, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் ஜார்க்கண்டில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர். அதேவேளையில் ஹேமந்த் சேரன் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில் கோழைத்தனமான ஆங்கிலேயர்களைப் போல் பின்னால் இருந்து தாக்குவது ஏன் என பா.ஜ.க.-வை ஹேமந்த் சோரன் விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக ஹேமந்த் சோரன் கூறியதாவது:-

    உங்களுக்கு தைரியம் இருந்தால் முன்னால் இன்று மோதவும். கோழைத்தனமான ஆங்கிலேயர்களை போன்று பின்னால் இருந்து தாக்குவது ஏன்?.

    எனக்கு எதிராக சில நேரங்களில் அமலாக்கத்துறை, சில நேரங்களில் சிபிஐ, சில நேரங்களில் ஒரு அமைப்பு, சில நேரங்களில் வேறு யாரோ... என ஏவப்பட்டது. தற்போது என்னுடைய பெயரை களங்கப்படுத்த கோடிக்கணக்கில் செலவழிக்கப்படுகிறது. விசித்திரமான நிலைமை.

    பா.ஜ.க. இதற்கு முன்னதாக 5 வருடங்கள் ஆட்சியில் இருந்தது. அப்போது பள்ளிகளை மூடியது. ரேசன் கார்டுகளை ரத்து செய்தது. ஜார்க்கண்ட் பொது சேவை ஆணையம் (JPSC) தேர்வை நடத்தவில்லை. பா.ஜ.க. மத்தியில் 11 வருடங்கள் ஆட்சியில் இருந்து வருகிறது. ஜார்க்கண்டில் 5 வருடம் இருந்துள்ளது. அவர்களை டபுள் என்ஜின் அரசு என்று அழைத்துக் கொள்கிறார்கள். பிறகு ரகுபார் ஆட்சியில் யானை மட்டும் ஏன் ஐந்து வருடங்கள் பறந்தது?. ஐந்து ஆண்டுகளில் 13 ஆயிரம் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டது ஏன்?. ஐந்து வருடங்களில் 11 லட்சம் ரேசன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டன.

    ஏன் ஐந்து வருடத்தில் ஒரு ஜே.பி.எஸ்.சி. தேர்வு கூட நடத்தப்படவில்லை?. வயது முதிர்ந்த பெண்கள் மற்றும் விதவைகள் உதவித்தொகை ஏன் உயர்த்தப்படவில்லை. ஐந்து வருடங்களில் ஏன் பெற முடியவில்லை? ஏன் பட்டினியால் நூற்றுக்கணக்கானோர் இறந்தனர்?. ஏன் இளைஞர்கள் சைக்கிள்கள் தயாரித்து வாழைப்பழம் விற்பனை செய் வலியுறுத்தப்பட்டது?.

    மீண்டும் தனது அரசு தேர்வு செய்யப்பட்டால் மக்களுக்காகவும் ஒவ்வொரு ஜார்க்கண்ட் மக்களின் நலனுக்காகவும் தொடர்ந்து பணியாற்றுவோம்.

    இவ்வாறு ஹேமந்த் சோரன் விமர்சனத்தை வீசியுள்ளார்.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 2.6 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1.31 கோடி ஆண் வாக்காளர்களும், 1.29 கோடி பெண் வாக்காளர்களும் உள்ளனர்.

    2020-ல் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 30 இடங்களிலும், பா.ஜ.க. 25 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் 16 இடங்களில் வெற்றி பெற்றது.

    2014-ல் பா.ஜ.க. 37 இடங்களில் வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 19 இடங்களிலு், காங்கிரஸ் 6 இடங்களிலும் வெற்றி பெற்றது.

    Next Story
    ×