search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தாஜ்மஹாலை கபளீகரம் செய்யும் இந்து அமைப்புகள்.. காவிக் கொடி ஏற்றி வழிபாடு - வீடியோ
    X

    தாஜ்மஹாலை கபளீகரம் செய்யும் இந்து அமைப்புகள்.. காவிக் கொடி ஏற்றி வழிபாடு - வீடியோ

    • கங்கை நீரைத் தெளிப்பது, ஓம் ஸ்டிக்கர்கள் ஒட்டுவது என இந்து மகாசபை அமைப்பினர் தாஜ் மஹால் கபளீகரம் செய்து வருகின்றனர்
    • மீரா ரத்தோர் தாஜ் மஹால் காவிக் கோடியை ஏற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

    மும்தாஜ் நினைவாக முகலாய மன்னர் ஷாஜகான் கட்டிய காதலின் சின்னம். தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் பாஜக ஆட்சியில் சர்ச்சைக்குரிய இடமாக மாறியுள்ளது.

    தாஜ்மகால் முன்பு ஒரு இந்து கோவிலாக இருந்தது என்றும் அங்கு சிவன் கோவிலுக்கான அடையாளங்கள் இருந்தன என்று இந்துத்துவ வலதுசாரி அமைப்புகள் நீண்ட காலமாகக் குற்றம் சாட்டி வருகின்றன. தேஜோ மஹால் என்று முன்பு அழைக்கப்பட்ட இக்கோயில் முகலாய ஆட்சியில் தாஜ்மஹால் என மாற்றம் செய்யப்பட்டது என்றும் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் சமீப நாட்களாக, கங்கை நீரைத் தெளிப்பது, ஓம் ஸ்டிக்கர்கள் ஒட்டுவது என தீவிர வலதுசாரி இந்து அமைப்பான அகில பாரத இந்து மகாசபை அமைப்பினர் தாஜ் மஹாலை கபளீகரம் செய்து வருகின்றனர். கடந்த வாரம் சிவபெருமான் கனவில் வந்து கூறியதாகக் கங்கை நீரை எடுத்துவந்து பூஜை செய்ய முற்பட்ட பெண்ணை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

    நேற்று முன்தினம் சுற்றுலாப் பயணிகள் போல் உள்ளே நுழைந்த இந்து மகாசபையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், ஷாஜகான்- மும்தாஜ் சமாதி அமைத்துள்ள இடத்தில் கங்கை நீரை ஊற்றும் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து அவர்கள் மத்திய தொழிற் பதுகாப்பு படையினர்களால் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், அதே இந்து மகாசபையைச் சேர்ந்த மீரா ரத்தோர் என்ற பெண், கங்கை நீரைக்கொண்டு பூஜை செய்து, தாஜ் மஹாலில் காவிக்கொடியை ஏற்றியுள்ளார். இதனைத்தொடர்ந்து அவரும் பாதுகாப்புப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மீரா ரத்தோர் தாஜ் மஹால் காவிக் கோடியை ஏற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×