என் மலர்
இந்தியா
பொது சிவில் சட்டத்தால் இந்துக்கள் எந்த வகையிலும் பயனடையமாட்டார்கள்: மம்தா பானர்ஜி
- முதல் இரண்டு கட்ட தேர்தல் வாக்கு சதவீதத்தை பார்த்த பிறகு, பா.ஜனதா தோல்வியடையும் என்பதை நாம் உறுதியாக நம்ப முடியும்.
- மீதமுள்ள ஐந்து கட்ட தேர்தல்களிலும் அவர்கள் தோல்வியை சந்திப்பார்கள்.
சிறுபான்மையினர் அதிக அளவில் வசிக்கும் முர்ஷிதாபாத், ஜாங்கிபுர் மக்களவை தொகுதிகளில் மம்தா பானர்ஜி அடுத்தடுத்து தேர்தல் பிரசார பேரணியில் கலந்த கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் வரும்போதெல்லாம் அவர்கள் ஒரு விசயத்தை பயன்படுத்துவார்கள் அல்லது வகுப்புவாத பதற்றத்தை ஏற்படுத்துவார்கள். இந்த முறை அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக பொது சிவில் சட்டத்தை எடுத்துள்ளார்கள். அது குறித்து பரப்புரை செய்கிறார்கள். தேர்தல் சொல்லாடலைத் தவிர அதில் வேறு ஏதும் இல்லை. இதனால் இந்துக்கள் எந்த வகையிலும் பயனடையமாட்டார்கள்.
வாக்குமுறை மற்றும் முதல் இரண்டு கட்ட தேர்தல் வாக்கு சதவீதத்தை பார்த்த பிறகு, பா.ஜனதா தோல்வியடையும் என்பதை நாம் உறுதியாக நம்ப முடியும். மீதமுள்ள ஐந்து கட்ட தேர்தல்களிலும் அவர்கள் தோல்வியை சந்திப்பார்கள். பா.ஜனதாவுக்கு பயம் மற்றும் பீதி ஏற்பட்டுள்ளது. தற்போது காவி முகாம் தோற்கடிக்கப்பட வேண்டும்.
யாராவது ஒருவர் தவறில் ஈடுபட்டால், அதை சரி செய்து கொள்ள முடியும். ஆனால், 26 ஆயிரம் வேலைகளை (ஆசிரியர்கள் வேலை நியமனம் செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது) பறித்தது ஏற்றுக் கொள்ள முடியாதது. இது பா.ஜனதாவின் சூழ்ச்சி. உங்களின் வேலைகளை பறித்த அவர்களுக்கு வாக்கு அளிக்காதீர்கள்.
சிஏஏ சட்டப்பூர்வமான குடிமக்களை வெளிநாட்டினர்களாக்குவதற்கான பொறியாகும். சிசிஏ-வை அமல்படுத்தினால், என்.ஆர்.சி. பின்பற்றப்படும். நாங்கள் இரண்டையும் மேற்கு வங்காளத்தில் அனுதிக்கமாட்டோம். அவர்கள் என்ஆர்சி-யை பயன்படுத்த விரும்புகிறார்கள். நான் அனுதிக்கமாட்டேன்.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.