search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பேமெண்ட் பிராப்ளம்.. செய்த கொலைக்கு காசு கொடுக்காததால் போலீசிடம் போன காண்டிராக்ட் கில்லர்
    X

    பேமெண்ட் பிராப்ளம்.. செய்த கொலைக்கு காசு கொடுக்காததால் போலீசிடம் போன காண்டிராக்ட் கில்லர்

    • மீரட் நகரில் வசிக்கும் அஞ்சலி என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
    • அஞ்சலி கொலை தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    உத்தரபிரதேசத்தில் கூலிக்காக கொலை செய்யும் காண்டிராக்ட் கில்லர் ஒருவர் தான் செய்த கொலைக்கு கொடுப்பதாக கூறப்பட்ட பணம் தனக்கு கிடைக்கவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    2023 ஆம் ஆண்டு ஜூன் 7 அன்று, மீரட் நகரில் உள்ள உமேஷ் விஹார் காலனியில் வசிக்கும் அஞ்சலி என்பவர் பால் பண்ணையிலிருந்து வீடு திரும்பியபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.

    கொலை செய்யப்பட்ட அஞ்சலி தனது முன்னாள் கணவர் நிதின் குப்தாவின் பெயரில் இருந்த வீட்டில் வசித்து வந்தார். அவரது மாமியார் அந்த வீட்டை யஷ்பால் மற்றும் சுரேஷ் பாட்டியாவுக்கு விற்றுள்ளார். ஆனால் அஞ்சலி அந்த வீட்டை காலி செய்யமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்துள்ளார்.

    இதனையடுத்து, யஷ்பால் மற்றும் சுரேஷ் ஆகியோர் நீரஜ் ஷர்மா என்பவரிடம் அஞ்சலியை கொலை செய்தால் 2 லட்ச ரூபாய் பணம் தருவதாக பேரம் பேசியுள்ளனர்.

    பின்னர் இந்த கொலை தொடர்பாக யஷ்பால், சுரேஷ், நீரஜ் ஷர்மா மற்றும் அஞ்சலியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த 2 பேர் என மொத்தம் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதனையடுத்து இந்த கொலை தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட அப்பெண்ணின் முன்னாள் கணவர் மற்றும் மாமியாரை போலீசார் விடுவித்தனர்.

    இந்நிலையில், ஒரு வருடத்திற்கு பிறகு ஜாமினில் வெளியே வந்த நீரஜ் ஷர்மா, இந்த கொலையில் அஞ்சலியின் முன்னாள் கணவர் மற்றும் அவரது மாமியாருக்கு தொடர்பு உள்ளது என்று போலீசில் புகார் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக போலீசாரிடம் பேசிய நீரஜ், "அஞ்சலியை கொலை செய்தால் ரூ.20 லட்சம் பணம் தருவதாக கூறிய அவர்கள் 1 லட்ச ரூபாயை முன்பணமாக கொடுத்தனர். கொலை செய்த பின்பு போலீசில் பிடிபட்டதால் மீதமுள்ள 19 லட்ச ரூபாயை என்னால் வாங்க முடியவில்லை. தற்போது ஜாமினில் வெளியே வந்த பின்பு மீதமுள்ள பணத்தை தரும்படி அவர்களிடம் கேட்டபோது அந்த பணத்தை தரமுடியாது என்று அவர்கள் மறுத்துவிட்டனர். ஆகவே அஞ்சலியின் மாமியார் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும் என்றுகூறி அவர்கள் இருவருக்கும் இடையிலான செல்போன் அழைப்புகளை இதற்கான ஆதாரங்களாக அவர் வழங்கியுள்ளார்.

    Next Story
    ×