search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காங்கிரஸ் முன்னாள் முதல்வர் கமல்நாத் பா.ஜனதாவுக்கு செல்கிறாரா?
    X

    காங்கிரஸ் முன்னாள் முதல்வர் கமல்நாத் பா.ஜனதாவுக்கு செல்கிறாரா?

    • கமல்நாத் இன்று டெல்லி சென்று பா.ஜனதா தலைவர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • அவரது மகன் நகுல் நாத் சமூக வலைத்தள முகப்பில் இருந்து காங்கிரஸ் வார்த்தையை நீக்கியுள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் கமல்நாத். இவர் மத்திய பிரதேச மாநிலத்தின் முக்கிய காங்கிரஸ் தலைவர். மேலும், அம்மாநில முதல்வராக இருந்துள்ளார். இவரது மகன் நகுல் கமல்நாத்.

    இருவரும் பா.ஜனதாவுக்கு தாவ இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேச மாநில அரசியலில் கடந்த சில தினங்களாக இதுதான் பரபரப்பான செய்தியாக பார்க்கப்படுகிறது.

    இதற்கு வலுசேர்க்கும் வகையில் காங்கிரஸ் கட்சி எம்.பி.யான நகுல் நாத் தனது சமூக வலைத்தள முகப்பில் இருந்து காங்கிரஸ் பெயரை நீக்கியுள்ளார். அதேவேளையில் இன்று மாலை கமலாந்த் டெல்லி சென்று பா.ஜனதாவின் மூத்த தலைவர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால் இருவரும் பா.ஜனதாவில் சேர அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    இதற்கிடையே மத்திய பிரதேச மாநில பா.ஜனதா தலைவர் வி.டி. சர்மா நேற்று, காங்கிரஸ் தலைவர்கள் அக்கட்சியின் முடிவுகளால் அப்செட் ஆகியுள்ளனர். பா.ஜனதா கட்சியின் கதவு காங்கிரஸ் கட்சியின் மேலும் சில சீனியர் காங்கிரஸ் தலைவர்களுக்காக திறந்தே இருக்கிறது.

    அந்த கட்சி தலைவர்கள் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பு விவகாரத்தில் அப்செட் ஆகியுள்ளனர். நீங்கள் யாரை குறிப்பிடுகிறீர்களோ, அவர்களது மனதில் வலி இருந்தாலும் அவர்களும் வரவேற்கப்படுவார்கள்" என்றார்.

    மத்திய பிரதேசத்தில் முன்னாள் எம்.எல்.எ. தினேஷ் அகிர்வார் மற்றும் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராகேஷ் கட்டாரே ஆகியோர் கடந்த 12-ந்தேதி பா.ஜனதா கட்சியில் இணைந்தனர்.

    சிந்த்வாரா மக்களவை எம்.பி.யான நகுல் நாத், தானாகவே அந்த தொகுதிக்கான காங்கிரஸ் கட்சி வேட்பாளர் என அறிவித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே கமல்நாத் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி பா.ஜனதாவுக்கு செல்லமாட்டார் என திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×