என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
மதுபான கொள்கை வழக்கு- அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பாஜக தீவிர போராட்டம்
- போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் இந்த தடுப்புகளை தள்ளிவிட்டு முன்னேற முயன்றனர்.
- முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை சமீபத்தில் இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
புதுடெல்லி:
டெல்லியில் மதுபான விற்பனைக் கொள்கையில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள பாஜக, போராட்டம் நடத்தி வருகிறது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகக் கோரி, ஆம் ஆத்மி கட்சி அலுவலகங்களுக்கு வெளியே இன்று பாஜக சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது.
கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் தடுப்புகளை வைத்திருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் இந்த தடுப்புகளை தள்ளிவிட்டு முன்னேற முயன்றனர். போலீசார் தடுத்து நிறுத்தியதால் போலீசாருடன் பாஜகவினர் மோதலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை சமீபத்தில் இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதன்மூலம், முதல்வர் கெஜ்ரிவால் ஊழலில் ஈடுபட்டது நிரூபணமாகி உள்ளது என பாஜக கூறியிருக்கிறது.
டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், 5 நபர்கள் மற்றும் 7 நிறுவனங்களுக்கு எதிரான துணை குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் நேற்று ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.