search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    ராகுல் காந்தி இல்லையே என... வயநாடு மக்களுக்கு பிரியங்கா காந்தியின் உறுதி
    X

    ராகுல் காந்தி இல்லையே என... வயநாடு மக்களுக்கு பிரியங்கா காந்தியின் உறுதி

    • வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதிகளில் வெற்றி பெற்றதால் ஒரு தொகுதியை விட்டுக்கொடுக்கும் நிலை ஏற்பட்டது.
    • வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்வார் என கார்கே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி ரேபரேலி மற்றும் வயாநடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். 2019-ல் அமேதி தொகுதியில் தோல்வியடைந்து வயநாட்டில் வெற்றி பெற்றார்.

    தற்போது இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். இதனால் இரண்டு தொகுதியில் ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டும். இரண்டு தொகுதியில் எந்த தொகுதியை விட்டுக்கொடுப்பார்? என்ற கேள்வி எழுந்தது. மக்களிடம் கேட்டு முடிவு எடுப்பேன் என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் ராகுல் காந்தி வயநாடு தொகுதியை விட்டுக்கொடுக்கிறார். ரேபரேலி தொகுதி எம்.பி.யாக நீடிப்பார் என காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று இரவு தெரிவித்தார். இன்று ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் பத்திரிகையாளர்களை சந்திக்கும்போது இவ்வாறு தெரிவித்தார்.

    பின்னர் பிரியங்கா காந்தி பேசும்போது "வயநாடு மக்களின் பிரதிநிதியாக இருப்பதில் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. நான் அங்குள்ள மக்களுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால், ராகுல் காந்தி இல்லையே என வயநாட்டு மக்களை உணர விடமாட்டேன்.

    தேர்தலில் போட்டியிடுவது பற்றி எனக்கு பதட்டம் இல்லை. வயநாட்டிற்கு என்னுடைய சிறந்ததை கொடுப்பேன். ராகுல் காந்தி தொடர்ந்து வயநாட்டிற்கு அடிக்கடி வருவார். ஆனால், நான் கொஞ்சம் கடினமாக உழைத்து எல்லோரையும் மகிழ்ச்சியாக முயற்சிப்பேன்" என்றார்.

    Next Story
    ×