search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மகனுக்கு தூக்கு  தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன்- பெண் டாக்டர் கொலைக் குற்றவாளியின் தாய்
    X

    மகனுக்கு தூக்கு தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன்- பெண் டாக்டர் கொலைக் குற்றவாளியின் தாய்

    • 33 வயதான முன்னாள் சிவில் போலீஸ் தன்னார்வலரான சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார்.
    • எனக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.

    மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கடந்த வருடம் ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. பயிற்சி மருத்துவர், 31 வயது பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் இரவு பணியின் போது மருத்துவமனையின் கருத்தரங்கு அறைக்குள் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

    இந்த வழக்கில் 33 வயதான முன்னாள் சிவில் போலீஸ் தன்னார்வலரான சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். சஞ்சய் ராய் குற்றவாளி என மாவட்ட நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரம் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் குற்றவாளியான சஞ்சய் ராயின் தாயார் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனக்கு மூன்று மகள்கள் உள்ளனர், அவர்களின் (பாதிக்கப்பட்ட பெண்ணுடைய பெற்றோரின்) வலியை நான் புரிந்துகொள்கிறேன். அவனுக்கு தகுதியான தண்டனை கிடைக்கட்டும். அவனை தூக்கிலிட வேண்டும் என்று நீதிமன்றம் கூறினாலும், அதை நான் ஏற்றுக்கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.

    முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராயின் மூத்த சகோதரி, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். சட்டம் என் சகோதரனை குற்றவாளி என கண்டறிந்துள்ளது. அதன்படி அவர் தண்டிக்கப்படுவார். நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று தெரிவித்தார்.

    சஞ்சய் ராய்க்கு நாளை நீதிமன்றத்தால் அறிவிக்கப்படும் தண்டனை, அதிகபட்சமாக மரண தண்டனையாகவோ அல்லது ஆயுள் தண்டனையாகவோ இருக்கலாம் என கூறப்படுகிறது. தீர்ப்புக்கு பின்னர் இந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும், தான் இதில் சிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் சஞ்சய் ராய் கூறியது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×