search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அரசியலமைப்பு சாதாரண பாபாவால் அல்ல, பாபா சாகேப் அம்பேத்கரால் எழுதப்பட்டது - லாலு பிரசாத்
    X

    அரசியலமைப்பு சாதாரண பாபாவால் அல்ல, பாபா சாகேப் அம்பேத்கரால் எழுதப்பட்டது - லாலு பிரசாத்

    • பாஜக 400 இடங்களில் வெற்றி பெற்றால் தான் அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற முடியும் என்று பாஜக எம்.பி.க்கள் தொடர்ச்சியாக பேசி வருகிறார்கள்
    • அரசியல் சாசனத்தை இயற்றியது பாபாசாகேப் அம்பேத்கர் என்பதுதான் அவர்களின் பிரச்சினை - லாலு பிரசாத் யாதவ்

    வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறவேண்டும் எனப் பிரதமர் மோடி கூறினார். இதனையடுத்து பாஜகவினர் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்பதை தேர்தல் முழக்கமாக கொண்டுள்ளனர்.

    இதனையடுத்து, பாஜக 400 இடங்களில் வெற்றி பெற்றால் தான் அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற முடியும் என்று பாஜக எம்.பி.க்கள் தொடர்ச்சியாக பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    பாஜக எம்.பிக்களின் இத்தகைய கருத்திற்கு ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "நமது அரசியல் சாசனம் சாதாரண பாபாவால் எழுதப்பட்டது அல்ல, பாபா சாகேப் அம்பேத்கரால் எழுதப்பட்டது. அரசியலமைப்பை மாற்ற நீங்கள் யார்? ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைத்து சமூக மக்களும் இதனை உங்களுக்கு புரிய வைப்பார்கள்.

    அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பாஜக மூத்த தலைவர்கள் பலரும் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு எதிராக மோடியும், பாஜக உயர்மட்டத் தலைவர்களும் நடவடிக்கை எடுக்காமல், அவர்களுக்கு வெகுமதியாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குகின்றனர். அரசியலமைப்புச் சட்டம், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், ஏழைகள் உள்ளிட்டவர்களுடன் பாஜகவுக்கு என்ன பிரச்னை?

    அரசியல் சாசனம் பக்கம் அவர்களின் பார்வை போனாலும் கூட, பிற்படுத்தப்பட்ட சமூக மக்களும் தலித்களும் ஏழைகளும் அவர்களின் கண்களை பிடுங்கியெறிந்து விடுவார்கள். அரசியல் சாசனத்தை மாற்ற இவர்கள் யார்?

    அரசியலமைப்பை மாற்றுவதன் மூலம், சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம், சமூக நீதி, இடஒதுக்கீடு ஆகியவற்றை இந்த நாட்டிலிருந்து ஒழிக்க நினைக்கிறது பாஜக. மக்களை ஆர்.எஸ்.எஸ் மற்றும் முதலாளித்துவ அடிமைகளாக்க நினைக்கிறார்கள்.

    பிரதமர் உண்மையில் பயப்படுகிறார். அவர் நாட்டு மக்களின் முன்பு அம்பலப்படுத்தப்பட்டதால் தேர்தல் தோல்விக்கு பயப்படுகிறார். அவரது தோல்வி பயத்தை மறைக்கவே அவர் பாஜக 370 க்கும் மேற்பட்ட இடங்கள் என்று பெருமை பேசுகிறார்.

    நாட்டில் சர்வாதிகாரத்தை கொண்டு வர பாஜக விரும்புகிறது, அதனால்தான் அவர்கள் அரசியலமைப்பை மாற்ற துடிக்கிறார்கள்" என்று லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தார்.

    Next Story
    ×