search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    முகமது ஜாவத்
    X

    நாட்டில் முஸ்லிம்கள் இல்லை என்றால் பாஜக கணக்கை தொடங்கியிருக்காது: காங்கிரஸ் எம்.பி.

    • நாட்டில் கல்வியை பாதுகாக்க வேண்டும். முகலாயர்களின் பெயர்களை மட்டும் நீக்குவதால் எந்த மாற்றமும் நிகழ்ந்து விடாது.
    • முஸ்லிம், தலித், ஏழை, மாணவ, மாணவியருக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டி அரசு ஆட்சி செய்கிறது.

    நாடாளுமன்ற மக்களவையில் கல்வி துறைக்கான மானிய கோரிக்கை விவாதத்தின்போது பீகார் மாநில கிஷன்கஞ்ச் தொகுதி காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவத் பேசும்போது கூறியதாவது:-

    நாட்டில் கல்வியை பாதுகாக்க வேண்டும். முகலாயர்களின் பெயர்களை மட்டும் நீக்குவதால் எந்த மாற்றமும் நிகழ்ந்து விடாது. முகலாயர்கள் இங்கே 300 வருடங்களாக இருந்தனர். வெறும் பெயரை மட்டுமே நீக்குவதால் அவர்கள் நீக்கப்பட்டதாகிவிடாது.

    முஸ்லிம்கள் மற்றவர்களை விட புத்திசாலிகள். மற்றவர்களை போல் நமக்கு அவர்கள் பங்களிக்க முடியும். நீங்கள் பாகுபாடு பார்க்கக்கூடாது என வேண்டுகோள் வைக்கிறேன்.

    முஸ்லிம், தலித், ஏழை, மாணவ, மாணவியருக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டி அரசு ஆட்சி செய்கிறது. நாட்டில் முஸ்லிம்கள் இல்லை என்றால், பாஜக கணக்கை (நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்) தொடங்கியிருக்காது. மைனாரிட்டிகளுக்கான திட்டங்களை மீண்டும் தொடங்க வேண்டும். உதவித்தொகை திட்டம் மீண்டும் தொடங்கப்பட வேண்டும்.

    பட்ஜெட்டில் காங்கிரஸ் ஆட்சியில் ஜிடிபி-யில் 3.36 சதவீதம் கல்விக்கு ஒதுக்கப்பட்டது. தற்போது 2.9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு முகமது ஜாவத் தெரிவித்தார்.

    Next Story
    ×