search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    uttarpradesh yogi adityanath
    X

    அரசுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்களுக்கு மாதம் ரூ.8 லட்சம் - உ.பி. அரசு அறிவிப்பு

    • யூட்யூப்-ல் உ.பி. அரசுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டால் 4 முதல் 8 லட்சம் வரை வழங்கப்படும்.
    • அரசுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உ.பி. அரசு அறிவிப்பு.

    உத்தரபிரதேச பாஜக அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்களுக்கு மாதம் 8 லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

    மாநில தகவல் தொலைத்தொடர்பு துறையாழ் தயாரிக்கப்பட்ட உத்தரபிரதேச டிஜிட்டல் மீடியா பாலிசி 2024க்கு உ.பி. மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

    இந்த புதிய கொள்கையின்படி எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் உ.பி. அரசுக்கு ஆதரவாக வீடியோ, போஸ்ட். ட்வீட், ரீல்ஸ் பதிவிடுபவர்களுக்கு அவர்களின் பாலோயர்கள் அடிப்படையில் 4 வகைகளாகப் பிரிக்கப்பட்டு ரூ.5 லட்சம், 4 லட்சம், 3 லட்சம் மற்றும் 2 லட்சம் வழங்கப்படும்.

    யூட்யூப்-ல் வீடியோ, ஷார்ட்ஸ் பதிவிடுபவர்களுக்கு அவர்களின் சப்ஸ்க்ரைபர்கள் அடிப்படையில் 4 வகைகளாகப் பிரிக்கப்பட்டு ரூ.8 லட்சம், 7 லட்சம், 6 லட்சம் மற்றும் 4 லட்சம் வழங்கப்படும்.

    உத்தர பிரதேசம் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்களும் இத்திட்டத்தின் மூலம் பயனடைய முடியும்

    மேலும் சமூக வலைத்தளங்களில் அரசுக்கு எதிராக, ஆட்சேபனைக்குரிய செய்திகளை வெளியிடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உ.பி. அரசு அறிவித்துள்ளது.

    Next Story
    ×