search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஏழைகள் பற்றி பேசினால் மைக் அணைக்கப்படுகிறது - ராகுல் காந்தி அதிரடி பேச்சு
    X

    ஏழைகள் பற்றி பேசினால் மைக் அணைக்கப்படுகிறது - ராகுல் காந்தி அதிரடி பேச்சு

    • ராகுல் காந்தி பேசிக்கொண்டிருந்தபோது மைக் தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலிழந்தது. 10 நிமிடங்கள் வரை அவரது பேச்சு தடைபட்டது
    • மக்கள் கொலை செய்ய வேண்டும், பொய்களைப் பயன்படுத்தி அரசாங்கத்தை நடத்த வேண்டும் என்று எங்காவது எழுதப்பட்டிருக்கிறதா?

    இந்திய அரசியல் அமைப்பு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லியில் அரசியல் கட்சிகள் மும்முரமாக நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது. அந்த வகையில் காங்கிரஸ் சார்பிலும் அரசியலமைப்பு சிறப்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.

    அரசியல் சாசனத்தின் நகலை காட்டி தனது உரையைத் தொடங்கிய ராகுல் காந்தி, மோடி மற்றும் பாஜக அரசு அரசியலமைப்பு தினத்தையொட்டி பாராளுமன்றத்தில் நான் உறுதியாகக் கூறுகிறேன், மோடி அரசியலமைப்பைப் படிக்கவே இல்லை. இந்தப் புத்தகத்தைப் படித்திருந்தால், அவர் தற்போது ஒவ்வொரு நாளும் செய்துவருவதைச் செய்ய மாட்டார்.

    அம்பேத்கர், ஜோதிராவ் புலே, புத்தர் மற்றும் காந்திஜி ஆகியோரால் முன்வைக்கப்பட்ட சமூக அதிகாரமளிக்கும் சிந்தனைகள் அரசியல் அமைப்பில் உள்ளது. உண்மை மற்றும் அகிம்சை அரசியலமைப்பில் உள்ளது. இதில் சாவர்க்கரின் குரல் எங்கு உள்ளது? வன்முறையைப் பயன்படுத்த வேண்டும், மக்கள் கொலை செய்ய வேண்டும், பொய்களைப் பயன்படுத்தி அரசாங்கத்தை நடத்த வேண்டும் என்று எங்காவது எழுதப்பட்டிருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.

    ராகுல் காந்தி பேசிக்கொண்டிருந்தபோது மைக் தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலிழந்தது. 10 நிமிடங்கள் வரை அவரது பேச்சு தடைபட்டது, மைக் சரியப்பட்ட பின்னர் பேசாத தொடங்கிய அவர், இந்த நாட்டில் தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் , ஏழைகள் என்று யாருக்காக பேசினாலும் மைக் அணைக்கப்படுகிறது, அப்படி அணைக்கப்படும் போது என்னை இருக்கையில் அமரும்படி ஏராளமானோர் கூறுகின்றனர்.

    அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது இதுதான், நான் அமர மாட்டேன். நான் தொடர்ந்து நிற்பேன். உங்கள் விருப்பப்படி மைக்கை அணைத்துக் கொள்ளுங்கள். நான் பேச வேண்டியதை பேசியே தீர்வேன் என்று தெரிவித்தார்.

    முன்னதாக மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ராகுல் காந்தி மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஆன பிறகு, ராகுல் காந்தி பேசும்போது மைக் ஆப் செய்யப்பட்டது, அவரின் பேச்சால் கொதித்த பாஜவினர் அவரை அமரும்படி கூச்சலிட்டனர். ராகுல் காந்தி பேசும்போது மைக்கை ஸ்விட்ச் ஆஃப் செய்வதாக சபாநாயகர் மற்றும் மோடி அரசு மீது காங்கிரஸ் சாட்டியது.

    Next Story
    ×