என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
மூதாட்டி கைளை உடைத்து வீசி சென்ற கொடூர மகன்- புதருக்குள் விடிய விடிய தவித்த பரிதாபம்
- வெங்கடரத்தினம்மா கைகள் உடைக்கப்பட்ட நிலையில் அழுது கொண்டு கிடந்தது தெரியவந்தது.
- பெற்ற தாய் என்றும் பாராமல் கைகளை உடைத்து புதரில் வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், கமலபாடுவை சேர்ந்தவர் வெங்கட ரத்தினம்மா (வயது 78).
இவரது மகன் வெங்கடேஸ்வரலு, மகள் திருப்பத்தமா என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
கணவர் இறந்து விட்டதால் வெங்கட ரத்தினம்மா மகன் வெங்கடேஸ்வரலு வீட்டில் வசித்து வருகிறார்.
வயது முதிர்வு மற்றும் சிறுநீரக கோளாறால் வெங்கட ரத்தினம்மா அவதி அடைந்து வந்தார். வெங்கடேஸ்வரலுவின் மனைவி மாமியாருக்கு பணிவிடை செய்ய விருப்பம் இல்லாததால் அவரை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வெங்கடேஸ்வரலு தனது மனைவியுடன் சேர்ந்து தாயை ஒரு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். நல்கொண்டா அடுத்த மிரியாகுலா அருகே உள்ள வைகுந்தம் என்ற இடத்தில் தாயை இறக்கிவிட்டார்.
அப்போது வெங்கடரத்தினமா மகனிடம் இங்கே ஏன் என்னை விட்டு செல்கிறாய் வீட்டிற்கு அழைத்துச் செல் என கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேஸ்வரலு மனைவியுடன் சேர்ந்து தாயின் 2 கைகளையும் பின்புறமாக வளைத்து கையை உடைத்தனர். பின்னர் அங்குள்ள புதரில் தள்ளிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டனர்.
அந்தப் பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டதால் வெங்கட ரத்தினம்மா இரவு முழுவதும் வலியால் அலறி துடித்தார். நேற்று காலை கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் அந்த வழியாக வந்தனர்.
மூதாட்டி அழும் சத்தத்தை கேட்ட அவர்கள் அங்கு சென்று பார்த்த போது வெங்கட ரத்தினம்மா கைகள் உடைக்கப்பட்ட நிலையில் அழுது கொண்டு கிடந்தது தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து நல்கொண்டா கலெக்டர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். குழந்தைகள் மற்றும் பெண்கள் குற்ற தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெங்கட ரத்தினம்மாவை மீட்டனர்.
அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதையடுத்து வெங்கடேஸ்வரலு, அவரது மனைவி ஆகியோரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் அறிவுரை வழங்கினர்.
இதுபோல் மீண்டும் தாயை கொடுமைப்படுத்தினால் வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.
பெற்ற தாய் என்றும் பாராமல் கைகளை உடைத்து புதரில் வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்