search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ரூ.680 மட்டும் வருமானம்: மத்திய மந்திரியின் சொத்து விவரங்களை சரிபார்க்க தேர்தல் ஆணையம் உத்தரவு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ரூ.680 மட்டும் வருமானம்: மத்திய மந்திரியின் சொத்து விவரங்களை சரிபார்க்க தேர்தல் ஆணையம் உத்தரவு

    • கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார்
    • ராஜீவ் சந்திரசேகர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், 2021-22-ம் ஆண்டு வருமானமாக வெறும் ரூ.680 மட்டுமே என குறிப்பிட்டுள்ளார்

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சசி தரூர் வேட்பாளராக போட்டியிடுகிறார். பா.ஜ.க. சார்பில் மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார். இதனால் அங்கு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

    இந்நிலையில், ராஜீவ் சந்திரசேகர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், 2021-22-ம் ஆண்டிற்கான தனது வரிக்குட்பட்ட வருமானமாக வெறும் ரூ.680 மட்டுமே என குறிப்பிட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளில் அவரது வருமானம் தொடர்ந்து குறைந்து வருவதாக கணக்கு காட்டியுள்ளார்.

    அப்போது அவர் மாநிலங்களவை உறுப்பினராக சம்பளம் வாங்கி கொண்டிருந்தார்.

    இந்நிலையில், ராஜீவ் சந்திர சேகர் தனது வேட்பு மனுவில் உண்மையான சொத்து மதிப்பை காட்டாமல் பல மடங்கு குறைத்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாஜக வேட்பாளருமான ராஜீவ் சந்திரசேகர் சமர்ப்பித்த சொத்து விவரங்களை சரிபார்க்குமாறு மத்திய நேரடி வரிகள் வாரியத்திற்கு (CBDT) தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    Next Story
    ×