search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பா.ஜ.க.வைச் சேர்ந்த EX MLA வீட்டில் IT சோதனை - 3 முதலைகள் பறிமுதல்
    X

    பா.ஜ.க.வைச் சேர்ந்த EX MLA வீட்டில் IT சோதனை - 3 முதலைகள் பறிமுதல்

    • முன்னாள் பாஜக எம்எல்ஏ ஹர்வன்ஷ் சிங் ரத்தோர் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் கூறப்பட்டது.
    • ரூ.3 கோடி ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மத்திய பிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டத்தில் பா.ஜ.க.வை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில், தங்கம், கணக்கில்காட்டப்படாத பணம், மற்றும் சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதையெல்லாம் விட அவரது வீட்டில் உள்ள குளத்தில் இருந்த 3 முதலைகளை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

    முன்னாள் பாஜக எம்எல்ஏ ஹர்வன்ஷ் சிங் ரத்தோர் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.155 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகளைத் தவிர ரூ.3 கோடி ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனிடையே, சோதனை நடைபெற்ற ரத்தோர் வீட்டில் உள்ள ஒரு சிறிய குளத்தில் மூன்று முதலைகள் காணப்பட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தொழிலதிபரும், பாஜக மூத்த தலைவருமான ரத்தோர், 2013 சட்டமன்றத் தேர்தலில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது தந்தை ஹர்னாம் சிங் ரத்தோர், மத்தியப் பிரதேச அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×