search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சம்பளதாரர்களுக்கு இனிப்பான செய்தி... தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு உயர்வு
    X

    சம்பளதாரர்களுக்கு இனிப்பான செய்தி... தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு உயர்வு

    • மொபைல் போன், கேமரா, டிவி உதிரிபாகங்களுக்கான அடிப்படை இறக்குமதி வரி 2.5 சதவீதமாக குறைப்பு
    • தங்கம், வெள்ளி, வைரம், பித்தளை, சிகரெட் உள்ளிட்டவற்றின் இறக்குமதி வரி அதிகரிப்பு

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2023-24ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள்:

    • 2023-24ஆம் நிதியாண்டில் ரூ.15.43 லட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு முடிவு
    • நிதி பற்றாக்குறை மொத்த ஜிடிபியில் 4.5 சதவீதமாக கொண்டு வரப்படும்
    • நடப்பு நிதியாண்டின் திருத்தப்பட்ட நிதி பற்றாக்குறை, வளர்ச்சியில் 6.4சதவீதமாக இருக்கும் என கணிப்பு
    • சில துறைகளுக்கான அடிப்படை இறக்குமதி வரி 23 சதவீதத்திலிருந்து 11 சதவீதமாக குறைப்பு
    • மொபைல் போன், கேமரா, டிவி உதிரிபாகங்களுக்கான அடிப்படை இறக்குமதி வரி 2.5 சதவீதமாக குறைப்பு
    • தங்கம், வெள்ளி, வைரம், பித்தளை, சிகரெட் உள்ளிட்டவற்றின் இறக்குமதி வரி அதிகரிப்பு
    • ரப்பர் மற்றும் ஆடைகளுக்கான இறக்குமதி வரியும் அதிகரிப்பு
    • ரூ.10,000 கோடி முதலீட்டில் பசு மற்றும் அதுசார்ந்த பொருளாதாரங்களை ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்
    • நடப்பாண்டு 6.5 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல் செயல்படுத்தப்பட்டுள்ளது.
    • தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்வு
    • ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை ஈட்டுபவர்கள் வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
    Next Story
    ×