என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
இந்தியா- சீனா படைகள்: கிழக்கு லடாக்கில் திரும்பப் பெறும் பணி முற்றிலுமாக நிறைவு
- கடந்த 4 ஆண்டுகளாக இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்துவந்த நிலையில் புதிய ஒப்பந்தம்.
- இந்தியா- சீனா இடையே இனிப்புகள் பரிமாறிக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா– சீனா எல்லையில் படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கை நிறைவடைந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா சீனா இடையே பல காலமாக எல்லைப் பிரச்சனை இருந்து வருகிறது. இதனால் எல்லைகளைத் துல்லியமாக வரையறை செய்ய முடியாமல் இருக்கிறது.
அதற்குப் பதிலாக எல்.ஏ.சி. எனப்படும் எல்லை கட்டுப்பாடு கோடு நிர்ணயிக்கப்பட்டு அவரவர் பகுதியில் இரு நாட்டு ராணுவமும் ரோந்து சென்று வந்தனர். அவ்வப்போது இந்தியப் பகுதிகளுக்குச் சீனா பெயர் வைப்பதும், தங்களது எல்லையில் குடியேற்றங்களை நிறுவுவதுமாகச் சீனா இருக்கிறது.
முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் வைத்து இந்திய ரோந்து படை மீது சீன ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியதால் நிலைமை இன்னும் மோசமாகத் தொடங்கியது. இந்த தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.
ஊடுருவிய நிலப்பகுதிகளிலிருந்து சீன ராணுவம் பின்வாங்க மறுத்து எல்.ஏ.சி. எல்லையை ஒட்டி கட்டுமானங்களை மேற்கொண்டு வந்தது.
இதையடுத்து, கடந்த 4 ஆண்டுகளாக இந்த பிரச்சனையைத் தீர்க்க இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்துவந்த நிலையில் புதிய ஒப்பந்தம் ஏற்பட்டுத்தப்பட்டது.
அதன்படி, 2020 ஜூன் மாதத்துக்கு முன் இருந்த உடன்பாட்டின்படி இரு நாட்டு ராணுவமும் ரோந்து செல்ல உடன்பாடு ஏற்பட்டது. எனவே எல்லையில் இருந்து இரு நாட்டு படைகளும் முன்பிருந்த முகாம்களின் துாரத்துக்கு பின்னோக்கி செல்லும் நடவடிக்கை தொடங்கின.
இந்த நடவடிக்கை தற்போது முடிவடைந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையொட்டி, தீபாவளியை முன்னிட்டு நாளை இந்தியா- சீனா இடையே இனிப்புகள் பரிமாறிக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, சீனத் தரப்பால் கட்டமைப்புகள் அகற்றப்படுகின்றன என்பதை நிரூபிக்கும் முதல் செயற்கைக்கோள் படங்களும் வெளியாகியுள்ளது.
இதற்கான முறையான அறிவிப்பு வந்த பின்பு 2020 மே மாதத்திற்கு முன்பு இருந்தது போல், எல்லையில் ரோந்து பணிகளில் ராணுவம் மீண்டும் ஈடுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்