search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உலகின் 3 ஆவது பெரிய உள்நாட்டு விமான சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது
    X

    உலகின் 3 ஆவது பெரிய உள்நாட்டு விமான சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது

    • இன்று உலகளவில் உள்நாட்டு விமான சந்தையில் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் ஆதிக்கம் செலுத்துகிறது.
    • 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் 74 விமான நிலையங்கள் இருந்தன. தற்போது அது 157 ஆக அதிகரித்துள்ளது.

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உள்நாட்டு விமான சந்தையில் 5 ஆம் இடத்தில் இருந்த இந்தியா இப்போது 3 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    10 ஆண்டுகளுக்கு முன்பு 80 லட்சம் இருக்கைகளை கொண்ட சிறிய உள்நாட்டு விமான சந்தையாக இந்தியா இருந்தது.

    அப்போது உள்நாட்டு விமான சந்தையில் இந்தோனேசியா 4 ஆம் இடத்திலும், பிரேசில் 3 ஆம் இடத்திலும் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் முதல் 2 இடங்களிலும் இருந்தது.

    இன்று உலகளவில் உள்நாட்டு விமான சந்தையில் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் ஆதிக்கம் செலுத்துகிறது.

    உள்நாட்டு விமான சந்தையில் இந்தோனேசியா, பிரேசில் நாடுகளை பின்னுக்கு தள்ளி 1.56 கோடி இருக்கைகளுடன் இந்தியா 3 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    உள்நாட்டு விமான சந்தையில் இந்தியா ஒவ்வொரு வருடமும் 6.9 சதவீத உயர்வை எட்டியுள்ளது. இது அபரிவிதமான வளர்ச்சியாகும்.

    கடந்த 10 ஆண்டுகளில், இண்டிகோ நிறுவனத்தின் சந்தை பங்கு கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது, 2014 இல் 32 சதவீதத்தில் இருந்து இன்று 62 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    கடந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி, இந்தியாவில் உள்ள விமான நிறுவனங்களில் 4,56,910 உள்நாட்டு பயணிகளை பயணம் செய்துள்ளனர். கொரோனா நோய்த்தொற்றுக்கு பின்பு அதிக உள்நாட்டு பயணிகள் பயணம் செய்த நாள் இதுவாகும்.

    10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் 74 விமான நிலையங்கள் இருந்தன. தற்போது அது 157 ஆக அதிகரித்துள்ளது.

    91 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் டிஜி யாத்ரா செயலியை பயன்படுத்தி டிக்கெட்டை பெற்றுள்ளனர். 2023 ஆம் ஆண்டில் 35 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

    Next Story
    ×