search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மானு பாகெரால் இந்தியா பெருமை கொள்கிறது- ஜனாதிபதி வாழ்த்து
    X

    மானு பாகெரால் இந்தியா பெருமை கொள்கிறது- ஜனாதிபதி வாழ்த்து

    • வெண்கலப் பதக்கம் வென்று அசத்தி, ஒலிம்பிக்கில் இந்தியா பதக்க வேட்டையை ஆரம்பித்துள்ளது.
    • இந்தியாவின் முதல் பதக்கத்தை மானு பாகெர் வென்றது பெருமையான தருணம்.

    பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் மானு பாகெர் பங்கேற்றார்.

    8 பேர் கலந்து கொண்டதில் இந்திய வீராங்கனை மானு பாகெர் 221.7 புள்ளிகள் பெற்று 3வது இடம் பிடித்தார். இதன்மூலம் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியதில், ஒலிம்பிக்கில் இந்தியா பதக்க வேட்டையை ஆரம்பித்துள்ளது.

    கொரிய வீராங்கனைகள் தங்கம், வெள்ளி பதக்கம் வென்றனர்.

    ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய மானு பாகெர் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், மானு பாகெரின் வெற்றி குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு எகஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் பதக்கப் பட்டியலைத் தொடங்கிய மனு பாக்கருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    துப்பாக்கி சுடும் போட்டியில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் இவர்தான். மனு பாக்கரால் இந்தியா பெருமை கொள்கிறது. அவரது சாதனை பல விளையாட்டு வீரர்களை, குறிப்பாக பெண்களை ஊக்குவிக்கும்.

    எதிர்காலத்தில் அவர் மேலும் சாதனை படைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    தொடர்ந்து, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா கூறுகையில், " பாரீஸ் ஒலிம்பிக்2024ல் பெண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் முதல் பதக்கத்தை மானு பாகெர் வென்றது பெருமையான தருணம்.

    வாழ்த்துகள் மானு, நீங்கள் உங்கள் திறமையையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியுள்ளீர்கள். மேலும், ஒலிம்பிக் பதக்கம் வென்றதன் மூலம் துப்பாக்கி சுடும் முதல் வீராங்கனையாக மாறியுள்ளீர்கள்" என்றார்.

    Next Story
    ×