search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ரேடாருக்கு தென்படாமல் செயல்படும் தரகிரி போர் கப்பல் அறிமுகம்
    X

    ரேடாருக்கு தென்படாமல் செயல்படும் தரகிரி போர் கப்பல் அறிமுகம்

    • ஏழு போர்க் கப்பல்கள் பல்வேறு கட்ட தயாரிப்பு நிலைகளில் உள்ளன.
    • மூன்று போர் கப்பல்கள் இந்திய கடற்படையில் சேர்க்கப்படும்.

    எதிரி நாடுகளின் ரேடாருக்குத் தென்படாமல் செயல்படும் போர்க் கப்பல்களை எம்.டி.எல். மற்றும் ஜி.ஆர்.எஸ்.இ நிறுவனங்கள் கட்டமைத்து வருகின்றன. தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ஏழு, பி17-ஏ ரக போர்க் கப்பல்கள் பல்வேறு கட்ட தயாரிப்பு நிலைகளில் உள்ளன.

    இந்த போர்க் கப்பல், கப்பல் கட்டும் துறையில் இந்தியாவை உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. 17ஏ போர்க் கப்பலின் 75 சதவீத ஆர்டர்கள் , தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட உள்நாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.


    இந்நிலையில் ரேடாருக்கு தென்படாமல் இயங்கும் தன்மை கொண்ட பி17-ஏ ரக போர்க் கப்பலான தரகிரியை மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடற்படை மனைவியர் நல சங்கத்தின் தலைவர் சாரு சிங் அறிமுகப் படுத்தினார். மேற்கு கடற்படையின் தலைமைத் தளபதி அஜேந்திர பஹதுர் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

    தரகிரி போர்க்கப்பலை போன்று எம்.டி.எல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இரண்டு போர் கப்பல்கள் தயார் நிலையில் உள்ளன. மூன்று போர் கப்பல்களும் இந்திய கடற்படையில் விரைவில் சேர்க்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    Next Story
    ×