search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    30 டன் நிவாரண பொருட்களை பாலஸ்தீனத்துக்கு அனுப்பிய  இந்தியா
    X

    30 டன் நிவாரண பொருட்களை பாலஸ்தீனத்துக்கு அனுப்பிய இந்தியா

    • மனிதாபிமான உதவியாக நிவாரணப் பொருட்கள் இன்று அனுப்பப்பட்டது.
    • முதல் தொகுப்பில் அத்தியாவசிய மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் படைக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகிறது. பாலஸ்தீன மக்களின் வசிப்பிடமான காசா பகுதியில் நடத்தி வரும் தொடர் தாக்குதல் காரணமாக மக்கள் போதிய உணவு, குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் ஐ.நா.வின் நிவாரணப் பணிகள் முகமை மூலம் பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா சார்பில் மனிதாபிமான உதவியாக நிவாரணப் பொருட்கள் இன்று அனுப்பப்பட்டது. 30 டன் மருந்துகள், உணவுப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

    பாலஸ்தீனத்துக்கு இன்று அனுப்பப்பட்டுள்ள முதல் தொகுப்பில் அத்தியாவசிய மருந்துகள், அறுவைச் சிகிச்சைக்கான மருந்து மற்றும் உபகரணங்கள், பல் மருத்துவம் சம்பந்தப்பட்ட பொருட்கள், பொது மருத்துவ சிகிச்சைக்கு தேவைப்படும் பொருள்கள், கலோரி அதிகம் நிறைந்த பிஸ்கட்டுகள் ஆகியவை அடங்கும்.

    இந்த தகவலை வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

    Next Story
    ×