search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியாவின் அக்னி 5 ஏவுகணை பரிசோதனை வெற்றி
    X

    அக்னி 5

    இந்தியாவின் அக்னி 5 ஏவுகணை பரிசோதனை வெற்றி

    • அக்னி 5 ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து சென்று இலக்கை துல்லியமாக தாக்கும்.
    • இந்த அக்னி 5 ரக ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

    புதுடெல்லி:

    அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று எதிரிகளின் இலக்குகளை அழிக்கும் இந்த அக்னி 5 ஏவுகணைகள் சுமார் 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம்வரை, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்துச் சென்று தாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து இன்று அக்னி 5 ஏவுகணை பரிசோதித்து பார்க்கப்பட்டது.

    இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததாகவும், குறிப்பிட்ட இலக்கை அக்னி 5 ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

    Next Story
    ×