search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜார்கண்ட் சட்டசபை தேர்தல் முடிவு: ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா பின்னடைவு
    X

    ஜார்கண்ட் சட்டசபை தேர்தல் முடிவு: ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா பின்னடைவு

    • இந்த தேர்தலில் 67.74 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
    • பர்ஹைத் தொகுதியில் போட்டியிட்ட ஹேமந்த் சோரன் முன்னிலையில் உள்ளார்.

    81 உறுப்பினர்கள் கொண்ட ஜார்கண்ட் சட்டசபைக்கு 2 கட்டங்களாக நடந்த தேர்தலில் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணி மற்றும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையே பலத்த போட்டி நிலவியது. இங்கு 1,211 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இந்த தேர்தலில் 67.74 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இது மாநிலம் உருவாக்கப்பட்டதில் இருந்து இதுவரை பதிவான ஓட்டுகளில் மிகவும் அதிகம் ஆகும்.

    இதையடுத்து இன்று காலை 8 மணி முதல் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஜேஎம்எம் இந்தியா கூட்டணி 51 இடங்களிலும் பாஜகவின் என்டிஏ கூட்டணி 28 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பிற கட்சிகள் 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பர்ஹைத் தொகுதியில் போட்டியிட்ட ஹேமந்த் சோரன் 9,657 வாக்குகள் பெற்று 4921 வாக்குகளில் முன்னிலையில் உள்ளார்.

    இந்த நிலையில், கண்டே தொகுதியில் போட்டியிட்ட ஹேமந்த் சோரனின் மனைவி கல்பான சோரன் 4593 வாக்குகள் வித்தியாத்தில் பின் தங்கி உள்ளார். அவர் 12,350 வாக்குகளை பெற்றுள்ளார்.

    Next Story
    ×