search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜார்க்கண்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்து.. 2 நபர் உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்
    X

    ஜார்க்கண்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்து.. 2 நபர் உயிரிழப்பு - மீட்பு பணி தீவிரம்

    • ஹவுராவில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் எண் - 12810 இன்று அதிகாலை தடம் புரண்டது.
    • 2 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஹவுராவில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் எண் - 12810 இன்று அதிகாலை தடம் புரண்டது. இந்த ரெயிலானது இன்று அதிகாலை 3.45 மணியளவில் ஜார்காண்டில் உள்ள ராஜ்கர்சவான் ரெயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டது. இந்த ரெயில் சரக்கு ரெயிலுடன் மோதியதால் இந்த விபத்து நடந்து இருப்பது முதற்கட்ட தகவல்களில் தெரியவந்துள்ளது.

    இந்த விபத்தில் 6 நபர் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. தற்போது காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. காயமுற்றவர்களுக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்தில் சிக்கிய 80 சதவீத பயணிகள் அருகில் உள்ள சக்கரதர்பூர் ரெயில் நிலையத்திற்கு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களை மீட்க ரயில் ஒன்று சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

    இந்த விபத்து காரணமாக அந்த வழித்தடத்தில் செல்லும் ரெயிலின் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. 5 ரெயிலின் சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ரத்து செய்யப்பட்ட ரெயில்களின் விவரங்கள்

    1 - 22861 ஹவுரா - தித்லாகார்க்- கண்டாபஞ்சி எக்ஸ்பிரஸ்

    2- 08015/ 18019 கராக்பூர்- ஜார்கிராம்- தன்பந்த் எக்ஸ்பிரஸ்

    3- 12021/ 12022 ஹவுரா- பர்பில் - ஜன் ஷடப்தி எக்ஸ்பிரஸ்

    4 -18109 டாடாநகர் - இத்வாரி எக்ஸ்பிரஸ்

    5- 18030 ஷலிமார் - LTT எக்ஸ்பிரஸ்

    Next Story
    ×