என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பயங்கரவாத சம்பவங்கள் எதிரொலி... உயர்மட்ட குழுவுடன் அமித் ஷா மீண்டும் ஆலோசனை
- ரியாசியில் நடந்த தாக்குதலில் ஒன்பது யாத்ரீகர்கள் கொல்லப்பட்டனர்.
- பயங்கரவாத தாக்குதல்களை கையாள்வதற்கான தயார்நிலை குறித்து உள்துறை அமைச்சரிடம் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 9-ந்தேதியில் இருந்து அடுத்தடுத்து மூன்று பயங்கரவாத சம்பவங்களால் ரியாசி, கதுவா மற்றும் தோடா ஆகிய இடங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரியாசியில் நடந்த தாக்குதலில் ஒன்பது யாத்ரீகர்கள் கொல்லப்பட்டனர். ஒரு மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஜவான் கொல்லப்பட்டார். ஒருவர் காயமடைந்தார், ஏழு பாதுகாப்பு படையினர் படுகாயமடைந்தனர். இதே போன்று நடத்தப்பட்ட மற்ற தாக்குதலில் பயங்கரவாதி கொல்லப்பட்டான்.
ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தொடர்ச்சியான பயங்கரவாத சம்பவங்களையடுத்து பாதுகாப்பு நிலவரம் குறித்து பிரதமர் மோடி கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தினார். இதில் அஜித் தோவல் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அப்போது பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன், பாதுகாப்பு படைகளை அனுப்புவது குறித்தும், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து அமித் ஷா, ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலைமை குறித்து நேற்று உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் உயர்மட்டக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தினார்.
அப்போது ஜம்மு காஷ்மீரில் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்களை கையாள்வதற்கான தயார்நிலை குறித்து உள்துறை அமைச்சரிடம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக இன்று விரிவான கூட்டத்திற்கு அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று நடைபெறும் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், மத்திய உள்துறை செயலாளர் மற்றும் ராணுவம், போலீஸ், ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமித்ஷா இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்த உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்