என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
காளி போஸ்டர் சர்ச்சை- இயக்குநர் லீனா மணிமேகலை மீது டெல்லி போலீஸ் வழக்கு
- காளி பட போஸ்டர் இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி டெல்லி போலீசில் புகார்.
- இந்து கடவுளை அவமரியாதை செய்வதாக கனடா இந்து அமைப்புகள் குற்றச்சாட்டு.
இயக்குநர் லீனா மணிமேகலை தற்போது இயக்கியுள்ள காளி என்ற ஆவணப்படத்தின் போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
காளி வேடத்தில் இருக்கும் பெண் ஒருவர் வாயில் சிகரெட் புகைப்பது போன்றும், கையில் எல்ஜிபிடி சமூகத்தின் கொடியை ஏந்தி இருப்பது போன்றும் போஸ்டரில் இடம்பெற்றிருந்தது. இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் இந்த போஸ்டர் இருப்பதாக கூறி பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் காளி பட போஸ்டர் இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இயக்குனர் லீனா மணிமேகலை மீது டெல்லி மற்றும் உத்தரப் பிரதேச மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சர்ச்சைக்குரிய போஸ்டர் தொடர்பாக 153A மற்றும் 295A ஆகிய பிரிவுகளின் கீழ் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக டெல்லி காவல்துறை பி.ஆர்.ஓ. சுமன் நல்வா, தெரிவித்துள்ளார்.
இதனிடையே டொராண்டோவில் உள்ள ஆகாகான் அருங்காட்சியகத்தில் காளி ஆவணப்படம் தொடர்பான நிகழ்ச்சிகள் மற்றும் போஸ்டர் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய பொருட்களை திரும்பப் பெறுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை இந்திய தூதரகம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக கனடா தலைநகர் ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து கடவுளை அவமரியாதையாக சித்தரிப்பது குறித்து கனடாவில் உள்ள இந்து சமூகத் தலைவர்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக காளி ஆவணப்பட போஸ்டர் குறித்து இயக்குனர் லீனா மணிமேகலை தமது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு மாலைப்பொழுதில் டோரோண்டோ மாநகரத்தில காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடக்கிற சம்பவங்கள் தான் இந்த ஆவணப்படம் என்று கூறியுள்ளார்.