என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![2024ல் பா.ஜ.க. சார்பில் கங்கனா போட்டி 2024ல் பா.ஜ.க. சார்பில் கங்கனா போட்டி](https://media.maalaimalar.com/h-upload/2023/12/20/1994050-india-kanganaranaut-election.webp)
2024ல் பா.ஜ.க. சார்பில் கங்கனா போட்டி
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ஆளும் பா.ஜ.க.வின் பல நடவடிக்கைகளை ஆதரித்து வருபவர் கங்கனா
- எந்த தொகுதி என்பது முடிவாகவில்லை என்றார் கங்கனாவின் தந்தை
இந்தி திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கங்கனா ரனாவத் (36). இவர் 4 தேசிய விருதுகள், 5 பிலிம்ஃபேர் விருதுகள் வென்றவர்.
நாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள் குறித்து சமூக வலைதளங்களில் தனது கருத்துக்களை பதிவு செய்து வரும் கங்கனா, ஆளும் பா.ஜ.க.வினரின் பல நடவடிக்கைகளையும், பிரதமர் நரேந்திர மோடியையும் ஆதரித்து வருபவர்.
அடுத்த வருடம் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
கங்கனாவிடம் தேர்தலில் போட்டியிடும் ஆர்வம் உள்ளதா என கேட்கப்பட்ட போது, "பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் ஆசி இருந்தால் போட்டியிடுவேன்" என தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
இந்நிலையில், "அடுத்த வருட பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வின் சார்பில் கங்கனா ரனாவத் போட்டியிடுவார். அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பது தற்போது உறுதியாகவில்லை" என கங்கனாவின் தந்தை அமர்தீப் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் ஹிமாச்சல் பிரதேச மாநில பிலாஸ்பூர் நகரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிகழ்ச்சியில் கங்கனா கலந்து கொண்டார். தனது கருத்துக்கள் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்துடன் ஒத்து போவதாக அப்போது அவர் தெரிவித்தார்.
கடந்த 2008ல் தமிழில் வெளியான "தாம் தூம்" எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.