என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை..! மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கனிமொழி எம்.பி கோரிக்கை
- லட்சத்தீவு கடற்படையால் கைதான தூத்துக்குடி தருவைக்குளம் மீனவர்கள் 10 பேரை மீட்க கோரிக்கை.
- குஜராத் அருகே காணாமல் போன மீனவர் அண்ணாதுரையையும் மீட்க நடவடிக்கை.
திமுக எம்.பி கனிமொழி இன்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து பேசினார்.
அப்போது, லட்சத்தீவு கடற்படையால் கைதான தூத்துக்குடி தருவைக்குளம் மீனவர்கள் 10 பேரையும், குஜராத் அருகே காணாமல் போன மீனவர் அண்ணாதுரையையும் மீட்க நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கனிமொழி கடிதம் ஒன்றை வழங்கிானர்.
இதுகுறித்து, கனிமொழி எம்.பி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்கள் லட்சத்தீவு அருகே கடலோர காவல்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை உடனடியாக விடுவிக்கவும், குஜராத் போர்பந்தர் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது காணாமல் போன தூத்துக்குடி அயன்பொம்மையாபுரம் பகுதியைச் சேர்ந்த மீனவர் அண்ணாதுரையை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துக் கேட்டுக் கொண்டேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.