search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கார்கில் போர்: பாகிஸ்தான் படை ஊடுருவல் குறித்து இந்திய வீரர்களை எச்சரித்த ஆடு மேய்ப்பர் உயிரிழப்பு
    X

    கார்கில் போர்: பாகிஸ்தான் படை ஊடுருவல் குறித்து இந்திய வீரர்களை எச்சரித்த 'ஆடு மேய்ப்பர்' உயிரிழப்பு

    • பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை கடந்து இந்தியப் பகுதிக்குள் ஊடுருவினர்.
    • 25வது கார்கில் விஜய் திவாஸில் நம்க்யால், ஆசிரியையாக உள்ள தனது மகள் டிசெரிங் டோல்கருடன் கலந்துகொண்டார்.

    இந்தியா - பாகிஸ்தானின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு, லடாக்கின் கார்கில் மாவட்டத்தின் வழியே செல்கிறது. கடல் மட்டத்திலிருந்து, கிட்டத்தட்ட 15 ஆயிரம் அடி உயரத்தில் இந்த இடம் அமைந்துள்ளது.

    1999 ஆம் ஆண்டின், மே 3 ஆம் தேதி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் உள்ள கிளர்ச்சியாளர்கள் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை கடந்து இந்தியப் பகுதிக்குள் ஊடுருவினர்.

    உயரமான பகுதியை அடைந்த இந்த கூட்டுப்படை மே 5 ஆம் தேதி இந்திய வீரர்கள் உடன் சண்டையிடத் தொடங்கியது. மே தொடங்கி ஜூலை வரை நீடித்த இந்த போரில் ஆபரேஷன் விஜய் என்ற பெயரில் சண்டையிட்ட இந்திய ராணுவம் இறுதியில் வென்றது. இதுவே விஜய் திவாஸ் என்று கொண்டாடப்படுகிறது.

    இந்த வருடம் 25 வது விஜய் திவாஸ் கொண்டாடப்பட்டது. இந்த போரில் வீரமரணமடைந்த 527 வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இந்நிலையில் 1999 ஆம் ஆண்டு கார்கில் பகுதிக்குள் பாகிஸ்தானின் ஊடுருவல் குறித்து இந்திய படையினருக்கு முதலில் எச்சரித்த பெருமைக்குரிய லடாக்கி மேய்ப்பரான தாஷி நம்க்யால் [58 வயது] நேற்று [வெள்ளிக்கிழமை] காலமானார்.

    லடாக்கின் ஆரியப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கார்கோனில் வசித்து வந்த நம்கியால் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு இந்திய ராணுவம் அஞ்சலி செலுத்தியுள்ளது.

    இந்த ஆண்டு விஜய் ட்ராஸில் நடந்த 25வது கார்கில் விஜய் திவாஸில், நம்க்யால், ஆசிரியையாக உள்ள தனது மகள் டிசெரிங் டோல்கருடன் கலந்துகொண்டார்.

    Next Story
    ×