என் மலர்
இந்தியா

10 ஆண்டுகளில் ஆம் ஆத்மி 1350 கட்சிகளில் 3-வதாக உயர்ந்துள்ளது: கெஜ்ரிவால்
- நாம் மக்கள் பணியை வெற்றிகரமாக செய்து முடிக்காமல் இருந்திருந்தால்,
- மக்களுக்கு எந்தவிதமான நன்மைகள் செய்யாமல் இருந்திருந்தால் நமது கட்சியின் தலைவர்கள் ஜெயிலுக்கு சென்றிருக்கமாட்டார்கள்.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு மற்றும் 12-வது தேசிய கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாம் மக்கள் பணியை வெற்றிகரமாக செய்து முடிக்காமல் இருந்திருந்தால், மக்களுக்கு எந்தவிதமான நன்மைகள் செய்யாமல் இருந்திருந்தால், நமது கட்சியின் தலைவர்கள் ஜெயிலுக்கு சென்றிருக்கமாட்டார்கள். ஒவ்வொருவரும் அவர்களது குடும்பத்தினருடன் சந்தோசமாக இருந்திருப்பார்கள்.
10 ஆண்டுகளில் ஆம் ஆத்மி கட்சி 1350 கட்சிகளில் 3 இடத்திற்கு முன்னேறியுள்ளது. இரண்டு கட்சிகள் நாட்டை 75 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளன. அவர்கள் எளிதில் அதிகாரித்தை விட்டுவிட மாட்டார்கள். நாம் போராட்டத்தை சந்தித்து வருகிறோம் என நினைக்கிறேன். ஆனால், அதற்காக நாம் வருத்தப்பட தேவையில்லை.
இன்று சிறையில் இருக்கும் நம்முடைய ஐந்து தலைவர்கள் நம்முடைய ஹீரோக்கள். அவர்களுக்காக மிகவும் பெருமைப்பட வேண்டும். நான் தொடர்ந்து வழக்கறிஞர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். சிறையில் இருந்தால் கூட நம்முடைய தலைவர்களின் ஸ்பிரிட் உயர்வாக இருப்பது சிறந்த விசயம்.
இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.






