search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவைச் சேர்ந்த 7 ஆயிரம் பேர் தவிப்பு: மத்திய மந்திரிக்கு பினராயி விஜயன் வேண்டுகோள்
    X

    கேரளாவைச் சேர்ந்த 7 ஆயிரம் பேர் தவிப்பு: மத்திய மந்திரிக்கு பினராயி விஜயன் வேண்டுகோள்

    • இஸ்ரேலில் பல்வேறு நாட்டினர் உயிருக்கு பயந்த நிலையில் உள்ளனர்
    • மந்திரி மந்திர தலையிட்டு இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வேண்டுகோள்

    ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதால், கோபம் அடைந்த இஸ்ரேல் உச்சக்கட்ட தாக்குதலை நடத்தி வருகிறது. காசா முனை மீது ஏவுகணைகளை தொடர்ந்து வீசி வருகிறது. ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டும் வரை போர் ஓயாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    இதனால் இஸ்ரேல் மற்றும் காசா முனையில் பல்வேறு நாட்டினர் தவித்து வருகின்றனர். அவர்கள் உயிரை கையில் பிடித்தபடி இருந்து வருகின்றனர். சைரன் சத்தம், குண்டு மழைக்கு இடையில், தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    இந்தியாவைச் சேர்ந்த ஏராளமானோர் இஸ்ரேலில் வசித்து வருகிறார்கள். குறிப்பாக கேரளாவைச் சேர்ந்த 7 ஆயிரம் பேர் வசித்து வருவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தவர்கள் மற்றும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

    அவர் தனது வேண்டுகோளில் ''இஸ்ரேலில் உள்ள எங்கள் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, சாத்தியமான எல்லா வழிகளிலும் தலையிடுமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்'' என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

    ஏற்கனவே, சனிக்கிழமை ஹமாஸ் நடத்திய தாக்குதலில் கேரள மாநில நர்ஸ் ஒருவர் காயம் அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×