search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சீனாவில் வேகமாகப் பரவும் தொற்று: கேரளாவில் தீவிர கண்காணிப்பு
    X

    சீனாவில் வேகமாகப் பரவும் தொற்று: கேரளாவில் தீவிர கண்காணிப்பு

    • இந்த வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • இந்தியாவிலேயே கேரள மாநில மக்கள் அதிகளவில் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    சீனாவில் எச்.எம்.பி.வி. என்னும் வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதாகவும், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அதிகாரப்பூர்வமான எந்த ஒரு அறிவிப்பும் இல்லை.

    ஆனாலும் இந்த வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என சீன நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் விடுபட்டுள்ள நிலையில், மீண்டும் ஒரு தொற்று பரவலா என உலக நாடுகள் இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கியுள்ளன.

    இந்நிலையில், இந்தியாவிலேயே கேரள மாநில மக்கள்தான் அதிகளவில் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். எனவே சீனாவில் பரவும் எச்.எம்.பி.வி. தொற்று குறித்து அந்த மாநில அரசு தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கியுள்ளது.

    இதுதொடர்பாக கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் பேஸ்புக் செய்தியில், சீனாவில் கண்டறியப்பட்ட வைரஸ் தொற்றுநோயாக மாறக்கூடிய அல்லது மற்ற பகுதிகளுக்கு வேகமாகப் பரவக்கூடியதாக இதுவரை எந்த தகவலும் இல்லை.

    உலகின் அனைத்துப் பகுதிகளிலும் மலையாளிகள் இருப்பதால் சீனா உள்பட வெளிநாட்டவர்கள் அடிக்கடி மாநிலத்திற்கு வருவதால், கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    நாங்கள் சீனாவில் நிலைமையை கண்காணித்து வருகிறோம். இருப்பினும் மக்கள், குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் கூடுதல் விழிப்புடன் இருக்கவேண்டும். பொது இடங்களில் முகக்கவசம் அணியவேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×