search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மணிப்பூர் பற்றி எரிவதை பா.ஜ.க. விரும்புகிறது: கார்கே கடும் தாக்கு
    X

    மணிப்பூர் பற்றி எரிவதை பா.ஜ.க. விரும்புகிறது: கார்கே கடும் தாக்கு

    • மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை பரவத் தொடங்கியுள்ளது.
    • ஆளும் பாஜக மணிப்பூர் பற்றி எரிவதை விரும்புவதாக தெரிகிறது என காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

    உங்களுடைய இரட்டை இஞ்சின் ஆட்சியில் மணிப்பூர் பாதுகாப்பாக இல்லை. கடந்த 2023 மே முதல் அங்கு கற்பனைக்கு எட்டாத வலிகள், பிரிவுகள் மற்றும் கொதித்தெழும் வன்முறைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அது அங்குள்ள மக்களின் எதிர்காலத்தை அழித்துவிட்டது.

    பா.ஜ.க. வேண்டுமென்றே மணிப்பூர் பற்றி எரிவதை விரும்புகிறது. ஏனெனில் அது அவர்களின் பிரிவினைவாத வெறுப்பு அரசியலுக்கு உதவுகிறது.

    கலவரத்தால் பாதிக்கப்படும் பட்டியலில் பல மாவட்டங்கள் புதிதாக இணைகின்றன. வன்முறைத் தீ அண்டையில் உள்ள வடகிழக்கு மாநிலங்களுக்கும் பரவுகிறது.

    அழகான எல்லை மாநிலமான மணிப்பூரை பிரதமர் மோடி கைவிட்டு விட்டார். எதிர்காலத்தில் மோடி மணிப்பூருக்குச் சென்றாலும், துயரமான நேரத்தில் பிரச்சினைக்கு தீர்வு காண தங்கள் மாநிலத்தில் காலடி எடுத்து வைக்காத மோடியை அந்த மாநில மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×