search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வங்கதேசத்தினருக்கு இனி சிகிச்சை கொடுக்க மாட்டோம்.. கொல்கத்தா மருத்துவமனை அறிவிப்பு
    X

    வங்கதேசத்தினருக்கு இனி சிகிச்சை கொடுக்க மாட்டோம்.. கொல்கத்தா மருத்துவமனை அறிவிப்பு

    • ஜேஎன் ரே மருத்துவமனை வங்காள தேச நோயாளிகளுக்கு இனி சிகிச்சை அளிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளது.
    • கொல்கத்தாவில் உள்ள மற்ற மருத்துவமனைகளும் இதை செயல்படுத்த வேண்டும்

    வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் ஆட்சி கவிழ்க்கப்பட்டதிலிருந்து சிறுபான்மையினரான இந்துக்கள் மீது குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவறை 200க்கும் மேற்பட்ட கோவில்கள் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

    இந்துக்களைப் போராடத் தூண்டியதாகவும் பேரணியில் வங்கதேச கொடியை அவமதித்ததாகவும் இஸ்கான் இந்துமதத் தலைவர் சின்மோய் கிருஷ்ணதாஸ் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரித்தது.

    இந்நிலையில் வங்கதேச மக்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படாது என்று மேற்கு வங்க தலைநகரம் கொல்கத்தாவில் செயல்பட்டுவரும் மருத்துவமனை அறிவித்துள்ளது. வடக்கு கொல்கத்தாவின் மானிக்தலா பகுதியில் உள்ள ஜேஎன் ரே மருத்துவமனை வங்காள தேச நோயாளிகளுக்கு இனி சிகிச்சை அளிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளது.

    இந்த முடிவு குறித்துப் பேசிய மருத்துவமனையைச் சேர்ந்த அதிகாரி சுப்ரான்ஷு பக்த், நமது தேசியக்கொடி அவமதிக்கப்படுவதைப் பார்த்து, வங்கதேசத்தினருக்கு சிகிச்சை அளிப்பதை நிறுத்த முடிவு செய்துள்ளோம். அவர்களின் சுதந்திரத்தில் இந்தியா முக்கிய பங்காற்றியுள்ளது.

    ஆனால், அங்கு இந்தியாவுக்கு எதிரான மனநிலையையே பார்க்க முடிகிறது. எனவே கொல்கத்தாவில் உள்ள மற்ற மருத்துவமனைகளும் எங்களுக்கு ஆதரவளித்து வங்கதேசத்தினருக்கு சிகிச்சை அளிக்க மாட்டோம் என்று முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    Next Story
    ×