search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரம் - கல்லூரி முதல்வர் ராஜினாமா
    X

    கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரம் - கல்லூரி முதல்வர் ராஜினாமா

    • சஞ்சயின் செல்போனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்ததை போலீசார் கண்டறிந்துள்ளனர்.
    • மேற்குவங்க போலீசார் கைது செய்யவேண்டும் இல்லையென்றால் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும்.

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டரை பலாத்காரம் கொலை செய்த வழக்கில் சஞ்சய் ராய் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த கொலைக்குக் காரணமானவர்களை விரைவாகத் தண்டிக்கக் கோரி மருத்துவர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் இந்த கைது நிகழ்ந்துள்ளது.

    மருத்துவமனை வளாகத்தில் சிவிக் போலீஸ் எனப்படும் காவல்துறைக்கு உதவிகளைச் செய்யும் அங்கீகரிக்கப்பட்ட நபராக வேலை செய்துவந்தவன் இந்த சஞ்சய் ராய். கடந்த 8-ந் தேதி இரவு பணியில் ஈடுபட்டிருந்த பெண் மருத்துவரைக் பலாத்காரம் கொலை செய்துள்ளான்.

    சஞ்சயின் செல்போனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்ததை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

    இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கவேண்டும் என்று மேற்குவங்க பாஜகவினர் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வந்த நிலையில், "பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் மேற்குவங்க போலீசார் கைது செய்யவேண்டும் இல்லையென்றால் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும்" என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

    இந்நிலையில், பெண் மருத்துவர் கொலை விவகாரத்தை அடுத்து, அக்கல்லூரி முதல்வர் ராஜினாமா செய்துள்ளார்.

    4வது நாளாக மருத்துவர்களின் போராட்டம் நீடித்து வரும் நிலையில்,"இறந்துபோன மருத்துவரும் என் மகள் போன்றவர்தான். ஒரு பெற்றோராக நான் பதவியை ராஜினாமா செய்கிறேன்" என கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×