என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
டெல்லியில் கைலாஷ் கெலாட் தேசிய கொடி ஏற்றுவார்: கவர்னர் மாளிகை பரிந்துரை
- மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
- சுதந்திர தின விழாவில் அந்தந்த மாநில முதல் மந்திரிகள் தேசியக்கொடி ஏற்றுவார்கள்.
புதுடெல்லி:
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
சுதந்திர தின விழாவில் அந்தந்த மாநில முதல் மந்திரி தேசியக் கொடியை ஏற்றுவது மரபு. கெஜ்ரிவால் சிறையில் இருப்பதால் சிறையில் இருந்து வெளியே வந்து கொடியேற்றுவாரா என்ற சந்தேகம் எழுந்தது.
இதுதொடர்பாக பொது நிர்வாகத்துறை மந்திரி கோபால் ராய் கூடுதல் தலைமை செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், முதல் மந்திரி கெஜ்ரிவாலை சந்தித்துப் பேசினேன். சுதந்திர தின விழாவில் மந்திரி அதிஷி தேசியக் கொடியேற்றுவார் என கெஜ்ரிவால் தெரிவித்தார். சத்ரசால் மைதானத்தில் அதற்கான ஏற்பாடுகளை செய்ய கோருகிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதை ஏற்கமறுத்த பொது நிர்வாகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், சுதந்திர தின விழாவில் அதிஷி கொடி ஏற்றமுடியாது என தெரிவித்தார்.
இந்நிலையில், சத்ரசால் மைதானத்தில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் டெல்லி மந்திரி கைலாஷ் கெலாட் தேசியக் கொடி ஏற்றுவார் என கவர்னர் மாளிகை பரிந்துரை செய்துள்ளது.
சுதந்திர தின விழாவில் அந்தந்த மாநில முதல் மந்திரிகள் தேசியக்கொடி ஏற்றுவர் என்பது குறிப்பிடத்தக்கது.