என் மலர்
இந்தியா

ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகளுக்கு வாழ்நாள் தடையா?.. சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில்

- மனுவுக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.
- பாராளுமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கப்படுவது கடுமையானது என்றும், ஆறு ஆண்டுகள் தடை போதுமானது என்றும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்றும், நாட்டில் உள்ள எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விரைவாக முடிக்க வேண்டும் என்றும் கோரி வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவுக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அந்த பிரமாணப் பத்திரத்தில், தகுதி நீக்க காலத்தை முடிவு செய்வது முற்றிலும் பாராளுமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8(1) இன் கீழ், அரசியல்வாதிகள் ஊழல் வழக்கில் தண்டனை பெற்றபின் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காலம் தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு ஆண்டுகள் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால், விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு ஆண்டுகள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.