search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மதுபான கொள்கை வழக்கு: ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்
    X

    மதுபான கொள்கை வழக்கு: ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

    • நீங்கள் சஞ்சய் சிங்கை 6 மாதங்கள் நீதிமன்றக் காவலில் வைத்திருக்கிறீர்கள். அவருக்கு காவல் தேவையா? - உச்ச நீதிமன்றம்
    • அமலக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது

    டெல்லியில் ஆம் ஆத்மி அரசு அமல்படுத்திய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த வழக்கில் டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து 2023-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இவரது ஜாமின் மனுவை கடந்த 7-ம் தேதி விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் நீதிபதி ஜாமின் வழங்க மறுத்தது.

    இந்நிலையில், டெல்லி ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

    இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபாங்கர் தத்தா மற்றும் வராலே ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்தது.

    இந்த வழக்கில் பணம் எதுவும் மீட்கப்படவில்லை. ஆனால் நீங்கள் சஞ்சய் சிங்கை 6 மாதங்கள் நீதிமன்றக் காவலில் வைத்திருக்கிறீர்கள். அவருக்கு காவல் தேவையா? இல்லையா? என்பது குறித்து எங்களுக்குத் தெரிய வேண்டும் என்று அமலாக்கத்துறையிடம் நீதிமன்றம் கேள்வியெழுப்பியது.

    சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் வழங்குவதில் ஆட்சேபனை இல்லை என்று அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் பதில் அளித்தது. இதனையடுத்து சஞ்சய் சிங்கிற்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்.

    டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இந்த வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ள நிலையில், சஞ்சய் சிங்கிற்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

    Next Story
    ×