search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    லைவ் அப்டேட்ஸ்: புவி சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட ஆதித்யா எல்1
    X

    லைவ் அப்டேட்ஸ்: புவி சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட ஆதித்யா எல்1

    • ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று முற்பகல் 11.50 மணிக்கு தொடங்கியது.
    • ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்தியா சார்பில் முதன்முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வுசெய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையையும் ஆதித்யா எல்-1 விண்கலம் பெறுகிறது.

    இதில் பெங்களூவில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் வடிவமைத்த 7 ஆய்வுக்கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. பூமியில் சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் 'லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்' என்னும் இடத்தில் இந்த விண்கலம் நிலை நிறுத்தப்பட்டு குறிப்பாக, சூரியனை நோக்கிய கோணத்தில் நிறுத்தப்படுகிறது. இந்தக் கருவிகள் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து ஆய்வுசெய்ய இருக்கிறது.

    ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வுமையத்தில் பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்தது. இதையடுத்து, ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று முற்பகல் 11.50 மணிக்கு தொடங்கியது.

    தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் திட்டமிட்டப்படி இன்று பகல் 11.50 மணிக்கு விண்ணில் பாய்கிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

    Live Updates

    • 2 Sept 2023 4:41 PM IST

      சூரியன் குறித்த ஆய்வுகளுக்காக, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டிருக்கும் ஆதித்யா எல் 1 விண்கல திட்ட இயக்குநர், தென்காசியைச் சேர்ந்த நிகர் ஷாஜி அவர்களுக்கு வாழ்த்துகள். நம் நாட்டின் விண்வெளி துறைசார் பயணத்தில், பெரியதொரு மைல்கல்லாக இருக்கும் இந்த ஆய்வுத் திட்டத்தைத் திறம்பட வழிநடத்திவரும் அவரது பணிகள் வெற்றி பெற வாழ்த்துகள்- தி.மு.க எம்பி., கனிமொழி.

    • 2 Sept 2023 4:40 PM IST

      சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் முதல் முயற்சியான ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டு, புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. விண்வெளி அறிவியலில் மற்றுமொரு வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கும் இஸ்ரோவிற்கு எனது வாழ்த்துகள்- தி.மு.க எம்.பி கனிமொழி.

    • 2 Sept 2023 2:59 PM IST

      சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது என்ற செய்தி அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். மகிழ்ச்சியை இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தமிழகத்தைச் சேர்ந்த திட்ட இயக்குனர் நிகர்ஷாஜி மற்றும் குழுவினருக்கு அதிமுக சார்பாக வாழ்த்துக்கள்- எடப்பாடி பழனிசாமி

    • 2 Sept 2023 1:17 PM IST

      சந்திரயான் வெற்றியை தொடர்ந்து, இந்தியா தனது விண்வெளி பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த மனித குலத்தின் நன்மைக்காக பிரபஞ்சத்தை பற்றிய சரியான புரிதலுக்காக விஞ்ஞான முயற்சிகள் தொடரும்- பிரதமர் நரேந்திர மோடி

    • 2 Sept 2023 1:15 PM IST

      ஆதித்யா எல்1 விண்கலத்தை வெற்றிகரமாக ஏவிய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    • 2 Sept 2023 1:03 PM IST

      ஆதித்யா எல்1 சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது- திட்ட இயக்குனர் நிகர் ஷாஜி

    • 2 Sept 2023 12:18 PM IST

      ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • 2 Sept 2023 12:16 PM IST

      பூமியில் இருந்து தற்போது 330 கி.மீ தாண்டி பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் பயணிக்கிறது.

    • 2 Sept 2023 12:15 PM IST

      புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட பின்னர் ஆதித்யா எல்-1 லெக்ரோஞ்சியன் 1 புள்ளியை நோக்கி பயணமாகும்.

    • 2 Sept 2023 12:13 PM IST

      ராக்கெட்டின் பயணம் இயல்பாக உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

    Next Story
    ×