search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜி20 லோகோவில் தாமரை... வெட்கமின்றி சுய விளம்பரம்... பாஜக மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்
    X

    ஜி20 லோகோவில் தாமரை... வெட்கமின்றி சுய விளம்பரம்... பாஜக மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்

    • லோகோவில் தாமரையின் மீது பூமிப்பந்து வைக்கப்பட்டிருப்பது போல உள்ளது.
    • காங்கிரஸ் கொடியை தேசியக் கொடியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நேரு மறுத்து விட்டார்.

    புதுடெல்லி:

    ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா அடுத்த மாதம் ஏற்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ லோகோ, கருப்பொருள் மற்றும் இணையதளத்தை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார். இந்தியாவின் தேசியக் கொடியில் உள்ள நான்கு வண்ணங்களையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ள அந்த லோகோவில், தாமரையின் மீது பூமிப்பந்து வைக்கப்பட்டிருப்பது போல உள்ளது.

    பாஜகவின் தேர்தல் சின்னமான தாமரையை ஜி20 லோகோவில் பயன்படுத்தியிருப்பதாக காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "70 ஆண்டுகளுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வக் கொடியை இந்தியாவின் தேசியக் கொடியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நேரு மறுத்து விட்டார். தற்போது பாஜக ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமையேற்க உள்ள நிலையில் அதற்காக வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ லோகோவில் பாஜகவின் தேர்தல் சின்னமான தாமரை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் மோடியும் பாஜகவும் வெட்கமின்றி தங்களை விளம்பரப்படுத்திக்கொள்ளும் எந்த ஒரு வாய்ப்பையும் இழக்கமாட்டார்கள் என்பதை நாம் அறிவோம்' என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×