என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
மத்திய பிரதேசத்தில் அமித் ஷா, சத்தீஸ்கரில் ராகுல் காந்தி: தீவிர தேர்தல் பிரசாரம்
- அமித் ஷா மத்திய பிரதேச மாநிலத்தில் மூன்று நாட்கள் சுற்றுப் பயணம்
- ராகுல் காந்தி சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப் பயணம்
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. மத்திய பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா நினைக்கிறது. அதேவேளையில் சத்தீஸ்கரில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள காங்கிரஸ் விரும்புகிறது.
தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு தேசிய தலைவர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மத்திய பிரதேசத்தில் இன்று முதல் மூன்று நாட்கள் பயணம் மேற்கொண்டு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட இருக்கிறார்.
ஜபால்புர், சிந்த்வாரா, போபால், சத்தார்புர், ரெவா, ஷஹ்டோல், உஜ்ஜைன், இந்தூர், குவாலியர் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் அமித் ஷா பல்வேறு பேரணியில் கலந்து கொண்டு பேசுகிறார்.
இன்று மதியம் ஜபால்புரில் உள்ள பா.ஜனதா கட்சி அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் பேசுகிறார். மாலை 4 மணிக்கு சிந்த்வாரா மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் நவம்பர் 17-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது, வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ந்தேதி நடைபெறும்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி, சத்தீஸ்கர் மாநிலத்தில் நான்கு தொகுதிகளில் நடைபெறும் பேரணியில் கலந்த கொள்ள இருக்கிறார். இன்றும், நாளையும் சத்தீஸ்கரில் கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.
இன்று ராய்ப்பூர் வரும் ராகுல் காந்தி மதியம் ஒரு மணிக்கு பானுபிரதாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெறும் பேரணியில் கலந்து கொண்டு பேசுகிறார். அதன்பின் மதியம் 2.40 மணிக்கு கொண்டகான் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பேரணியில் கலந்து கொண்டு பேசுகிறார். அதேபோல் நாளை இரண்டு இடங்களில் பேசுகிறார்.
90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கரில் வருகிற 7-ந்தேதி (நவம்பர்) 20 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு நவம்பர் 17-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்