search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நிலத்தை மாஃபியாக்கள் பிடுங்கி விட்டனர்.. கலெக்டர் ஆபீஸ் தரையில்  புரண்ட விவசாயி - வீடியோ வைரல்
    X

    'நிலத்தை மாஃபியாக்கள் பிடுங்கி விட்டனர்'.. கலெக்டர் ஆபீஸ் தரையில் புரண்ட விவசாயி - வீடியோ வைரல்

    • இந்த அரசாங்கமும், அதிகாரிகளும் ஊழல் நிறைந்தவர்களாக உள்ளனர்.
    • ஆட்சியர் அலுவலக அறையில் அழுதபடி புறண்டுள்ள வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    தனது நிலம் தன்னிடமிருந்து அபகரிக்கப்பட்டதாக விவசாயி ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைகளை குவித்தபடி புரண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் மந்சவுர் மாவட்டத்தில் உள்ள சங்கர்லால் என்ற விவசாயி வைத்திருந்த நிலத்தில் பாதி அவருக்கு சொந்தமில்லை என்றும் அந்த பாதி நிலத்தை அதன் அப்போதய சொந்தக்காரர்கள் ஏற்கனவே பக்கத்து கிராமத்தில் உள்ளவருக்கு 2010 ஆம் ஆண்டில் விற்றுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

    தாசில்தார் முன்னிலையில் நடந்த பத்திரப்பதிவுக்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறி தற்போது நிலத்தை வாங்கியவரின் மகன் நிலத்துக்கு சொந்தம் கொண்டாடியுள்ளார். இந்நிலையில் அந்த நிலம் தன்னுடையதே என்றும் தனது குடும்பமே அதில் இத்தனை காலமாக விவசாயம் பார்த்து வந்ததாகவும், எனவே இந்த பிரச்சனையை தீர்த்து வைக்கும் படியும் பல முறை சங்கர்லால் அரசு அலுவலகங்களுக்கு நடையாக நடந்துள்ளார்.

    ஆனால் இதுகுறித்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் விரக்தி அடைந்த விவசாயி சங்கர்கர்லால், தனது நிலத்தை மாஃபியாக்கள் தன்னிடம் இருந்து பறித்துவிட்டனர், தாசில்தாரின் தவறினால் விவசாயியான நான் பாதிக்கப்பட்டுள்ளேன், இந்த அரசாங்கமும், அதிகாரிகளும் ஊழல் நிறைந்தவர்களாக உள்ளனர். அரசாங்கத்தால் விவசாயிகள் ஏமாற்றப்படுகின்றனர் என்று ஆட்சியர் அலுவலக அறையில் கைகளை குவித்தபடி புறண்டுள்ள வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    Next Story
    ×