என் மலர்
இந்தியா
மகா கும்பமேளா: காசி விஸ்வநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்த ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லாரென்!
- சாதுக்கள், துறவிகள், பக்தர்கள் என உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 45 கோடி பேர் கலந்து கொள்வார்கள்
- 1991 இல் திருமணம் செய்துகொண்ட ஸ்டீவ் - லாரென் தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர்
இந்துக்களின் முக்கிய திருவிழாக்களில் மகா கும்பமேளாவும் ஒன்று. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த விழா கொண்டாடப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ், உத்தரகாண்ட் மாநிலம் அரித்வார், மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மற்றும் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் ஆகிய 4 ஊர்களில் உள்ள ஆற்றங்கரையில் கும்பமேளா கொண்டாடப்படுகிறது.
அதில் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவே மிகவும் புகழ்பெற்றது. அங்கு கங்கை, யமுனை மற்றும் கண்களுக்கு புலப்படாத சரஸ்வதி ஆறு ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நடைபெறுவதால் இது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
3 நதிகளும் சங்கமிக்கும் இடத்தை திரிவேணி சங்கமம் என்று அழைக்கிறார்கள். கும்பமேளா நடைபெறும் காலங்களில் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதை இந்துக்கள் மிகவும் புனிதமாக கருதுகிறார்கள்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த மகா கும்பமேளா நிகழ்ச்சிகள் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. உலகின் மிகப்பெரிய விழாவான இந்த மகா கும்பமேளாவில் சாதுக்கள், துறவிகள், பக்தர்கள் என உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 45 கோடி பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பிரபல செல்போன் ஆப்பிள் நிறுவனத்தின் மறைந்த இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் உடைய மனைவி கும்பமேளாவை ஒட்டி இந்தியா வந்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸ் கணைய புற்றுநோய் காரணமாக தனது 56 வயதில் உயிரிழந்தார். அவரது மனைவி லாரென் பாவெல்(61), ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டவராக இருந்து வருகிறார். 1991 இல் திருமணம் செய்துகொண்ட ஸ்டீவ் - லாரென் தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், லாரென் பாவெல், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வருகை தந்து லாரென், சாமி தரிசனம் செய்தார். அவருடன் நிரஞ்சனி அகாரா ஆசிரமத்தை சேர்ந்த கைலாஷ் ஆனந்த் ஜி மகராஜ் உடன் வந்திருந்தார். லாரென் பாவெல் மேலும் சில நாட்கள் இந்தியாவில் தங்கியிருந்து மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
#WATCH | Varanasi, UP | Kailashanand Giri Ji Maharaj of Niranjani Akhara, along with Laurene Powell Jobs, wife of the late Apple co-founder Steve Jobs, visit Kashi Vishwanath Temple in Varanasi. pic.twitter.com/TMv1W3t4iw
— ANI (@ANI) January 11, 2025