என் மலர்
இந்தியா
கும்பமேளா திரிவேனி சங்கமத்தில் புனித நீராடிய பாகிஸ்தான் சேர்ந்த ஆன்மிக குழு
- பிரதமர் மோடி உள்பட பலர் திரிவேனி சங்கமத்தில் புனித நீராடினர்.
- பாகிஸ்தானை சேர்ந்த ஆன்மிக குழு இந்தியா வந்தது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கி, கோலாகலமாக நடந்து வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் சாதுக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
பொது மக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் புனித நீராடி வருகின்றனர். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி உள்பட பலர் திரிவேனி சங்கமத்தில் புனித நீராடினர்.
இதுவரை கிட்டத்தட்ட 34 கோடிக்கும் அதிகமானோர் திரிவேனி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். இந்த நிலையில், மகா கும்பமேளாவின் புகழ் பெற்ற நிகழ்வில் கலந்து கொள்ள பாகிஸ்தானை சேர்ந்த ஆன்மிக குழு இந்தியா வந்தது.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தை சேர்ந்த 68 இந்து பக்தர்கள் குழு நேற்று பிரயாக்ராஜுக்கு வந்தது. பிறகு திரிவேனி சங்கமத்திற்கு வந்த அந்த குழு தங்களது மூதாதையர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்து, சங்கமத்தில் புனித நீராடினர்.
பாகிஸ்தானை சேர்ந்த பக்தர்கள் கங்கை, யமுனை மற்றும் புராண சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் புனித சங்கமத்தில் சடங்குகளை செய்து, தங்கள் முன்னோர்களுக்காக பிரார்த்தனை செய்தனர். நீராடிய பிறகு அந்த குழுவை சேர்ந்த மகிஜா தனது அனுபவத்தை விவரித்தார். அப்போது, இது தெய்வீகத்தை விட மேலானது என குறிப்பிட்டார்.