search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மகா கும்பமேளாவில் இந்துக்கள் அல்லாதோர் கடை வைக்கக்கூடாது - மஹந்த் ரவீந்திர புரி
    X

    மகா கும்பமேளாவில் இந்துக்கள் அல்லாதோர் கடை வைக்கக்கூடாது - மஹந்த் ரவீந்திர புரி

    • மகா கும்பமேளா, ஜனவரி 13-ந் தேதி தொடங்குகிறது.
    • இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்காட்டு கும்பமேளா என்று மோடி கூறியிருந்தார்.

    உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருதடவை, மகா கும்பமேளா நடக்கிறது. இந்த மகா கும்பமேளா, ஜனவரி 13-ந் தேதி தொடங்குகிறது. 45 நாட்கள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், மகா கும்பமேளாவில் இந்துக்கள் அல்லாதோர் கடை வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அகில பாரதிய அகாரா பரிஷத் தலைவர் மஹந்த் ரவீந்திர புரி தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிரயாக்ராஜ் நகரம் கும்பமேளாவின்போது அழகாகவும், சுத்தமாகவும், தெய்வீகமாகவும், அமைதியானதாகவும் இருக்க வேண்டும். அதன் பாதுகாப்பு மற்றும் புனிதத்தை பாதுகாக்க இந்துக்கள் அல்லாதவர்களை விலக்கி வைக்க வேண்டும்.

    இந்துக்கள் அல்லாதோருக்கு கடை அமைக்க அனுமதி கொடுக்கக்கூடாது. ஏனெனில் அவர்களுக்கு கடைகளை கொடுத்தால் எச்சில் துப்புதல், சிறுநீர் கழித்தல் போன்ற சுகாதாரமற்ற செயல்களில் அவர்கள் ஈடுபட வாய்ப்பிருக்கிறது" என்று தெரிவித்தார்.

    முன்னதாக 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்காட்டு கும்பமேளா. இந்த நிகழ்வில் எந்த பாகுபாடும் இல்லை. அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள்" என்று கூறியிருந்த நிலையில், மஹந்த் ரவீந்திர புரியின் பேச்சு சர்ச்சையாகியுள்ளது.

    Next Story
    ×