என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
மகாராஷ்டிரா முதல்வராகிறார் பட்நாவிஸ்: ஏக்நாத் ஷிண்டே மகனுக்கு துணை முதல்வர் பதவி?
- சிவசேனா தலைவர்கள் ஏக்நாத் ஷிண்டேதான் முதல்வராக நீடிக்க வேண்டும் என வலியுறுத்தல்.
- அதிக இடங்களை பிடித்ததால் முதல்வர் பதவியை பெற வேண்டும் என பா.ஜ.க. தலைவர் பிடிவாதம்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 288 தொகுதிகளில் சுமார் 230 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
தேர்தலுக்கு முன்னதாக சிவசேனா கட்சி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக இருந்தார். பா.ஜ.க.-வின் தேவேந்திர பட்நாவிஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வராக இருந்தனர்.
தற்போது பா.ஜ.க. தனித்து 130 இடங்களுக்கு மேல் வென்றுள்ளது. இதனால் தேவேந்திர பட்நாவிஸ்தான் முதல்வராக வேண்டும் என பா.ஜ.க. தலைவர்கள் வலியுறுத்தினர். அதேவேளையில் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக இருந்தபோது பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார். இதுதான் வெற்றிக்கு காரணம். இதனால் அவர்தான் முதல்வரான நீடிக்க வேண்டும் என சிவசேனா காட்சி தலைவர்கள் தெரிவித்தனர். மேலும் பீகார் மாடலில் (பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்ற நிலையிலும் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார்) ஆட்சியமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனால் முதல்வர் யார் என்பதில் இழுபறி ஏற்பட்டது. இது தொடர்பாக பா.ஜ.க. மேலிடம் பட்நாவிஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.
அதன்பின் பா.ஜ.க. தேர்வு செய்யும் முதல்வருக்கு ஆதரவு தெரிவிப்பதாக அஜித் பவார் தெரிவித்தார். அதேபோல் பா.ஜ.க. யாரை முதல்வராக அறிவித்தாலும் நாங்கள் அதை ஏற்றுக்கொள்வோம் என ஏக்நாத் ஷிண்டே அறிவித்தார்.
இருந்தபோதிலும் அதிகாரப்பூர்வமாக முதல்வர் யார் என்பது அறிவிக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் தொடர் பேச்சுவார்த்தையின் முடிவில் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராக தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏக்நாத் ஷிண்டே மகன் ஸ்ரீகாந்த் துணை முதல்வராக பதவி ஏற்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இன்று அல்லது நாளை இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.
5-ந்தேதி பட்நாவிஸ் முதல்வராக பதவி ஏற்க வாய்ப்புள்ளது. மகாராஷ்டிராவில் ஒருவர் முதல்வராகவும், இருவர் துணை முதல்வராகவும் பதவி ஏற்க இருக்கிறார்கள். தற்போது துணை முதல்வராக இருக்கும் அஜித் பவார் மீண்டும் துணை முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்